பக்கம் எண் :

429

 
 நீடு வாழிய நெடுந்தகை யானும்
கேளில் சேஎய் நாட்டினெந் நாளும்
25துளிநசைப் புள்ளினின் னளிநசைக் கிரங்கிநின்
 

அடிநிழற்பழகிய வடியுறை
கடுமான் மாற மறவா தீமே.
   (198)

    திணையுந்  துறையு  மவை. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித்
துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை வடம வண்ணக்கன் பேரி
சாத்தனார் பாடியது.

    உரை: அருவி தாழ்ந்த பெரு வரை போல - அருவி தாழ்ந்த
பெரிய மலை போல; ஆரமொடு பொலிந்த மார்பின் - ஆரத்தோடு
பொலிந்த மார்பின்கண்; தண்டா வேட்கை தணியாத; கடவுள் சான்ற
கற்பின் - தெய்வத்தன்மை யமைந்த கற்பினையும்; சேயிழை மடவோள்
பயந்த - செய்ய  ஆபரணத்தையுமுடைய  உன்னுடைய  மடவோள்
பெறப்பட்ட; மணி மருள் அவ் வாய்க் கிண்கிணிப் புதல்வர் - பவழ
மணிபோன்ற அழகிய வாயையும் கிண்கிணியையு முடைய புதல்வர்;
பொலிக என்றேத்தி - பொலிக வென்று வாழ்த்தி; திண் தேர்
அண்ணல் - திண்ணிய தேரையுடைய வேந்தே; நிற் பாராட்டி -
நின்னைப் புகழ்ந்து; காதல் பெருமையின் கனவிலும் அரற்றும் -
பரிசிலின் மேல் அன்பு பெரிதாகலின் கனவின்கண்ணும் நின்
புகழையே கூறும்; என் காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப - எனது
விருப்பத்தையுடைய நெஞ்சம் இன்புற்று மகிழ; ஆலமர் கடவுள்
அன்ன நின் செல்வம் - ஆலிலையின்கண் மேவிய திருமால்போலும்
நின்னுடைய செல்வத்தை யெல்லாம்; வேல் கெழு குருசில் -
வேலையுடைய தலைவ; கண்டேனாதலின் - கண்டே னாதலால்;
விடுத்த னென் - விடை கொண்டேன்; வாழ்க நின் கண்ணி -
வாழ்க நினது கண்ணி; தொடுத்த தண் தமிழ் வரைப்பகம் -
தொடர்புபட்ட குளிர்ந்த தமிழ்நாட் டெல்லை முழுதும்;
கொண்டியாகப் பணித்துக் கூட்டுண்ணும் - கொள்ளையாகக்கொண்டு
நின்பகைவரைத் தாழ்த்து அவர்கள் பொருள்களையும் வாங்கிக்
கொண்டு உண்ணும்; தணிப் பருங் கடுந் திறல் நின்னோ ரன்ன நின்
புதல்வர் - தணித்தற்கரிய மிக்க வலியையுடைய நின்னை யொக்கும்
வலியையுடைய நின்னுடைய மைந்தர்; என்றும் ஒன்னார் வாட -
எந்நாளும் பகைவர் தேய; அருங் கலம் தந்து - அவருடைய
பெறுதற்கரிய அணிகலத்தைக் கொண்டுவந்து; நும் பொன்னுடை நெடு
நகர் நிறைய வைத்த - நும்முடைய பொன்னுடைய நெடிய
நகரின்கண் பொலிய வைத்த; நின் முன்னோர் போல்க இவர்
பெருங் கண்ணோட்டம் - நின்னுடைய