பக்கம் எண் :

430

 

முன்னுள்ளோரைப் போல்க இவருடைய பெரிய கண்ணோட்டம்;
யாண்டும் நாளும் பெருகி - யாண்டும் நாளும் மிக்கு; ஈண்டு
திரைப்பெருங் கடல் நீரினும் - செறிந்த திரையையுடைய பெரிய
கடனீரினும்; அக் கடல் மணலினும் - அக் கடல் கொழித்திடப்பட்ட
மணலினும்; நீண்டு உயர் வானத்துறையினும் - நீண்டுயர்ந்த மழையின்
துளியினும்; நன்றும் - பெரிதும்; இவர் பெறும் புதல்வர்க்
காண்டொறும் - இவர் பெறும் பிள்ளைகளைக் காணுந்தோறும்; நீயும்
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி - நீயும் வாழிய நெடுங்
காலம் வாழ்க; நெடுந்தகை - பெருந்தகாய்; யானும் கேளில் சேஎய்
நாட்டின் - யானும் உறவில்லாத தூரிய நாட்டின்கண்ணே; எந்நாளும் -
நாடோறும்; துளி நசைப் புள்ளின் - துளியை நச்சு தலையுடைய
வானம்பாடி யென்னும் புட்போல; நின் அளி நசைக்கு இரங்கி -
நின்னுடைய வண்மை நசையான் இரங்கி; நின் அடி நிழல் பழகிய
அடியுறை - நினது அடிநிழற்கண் பழகிய அடியின் வாழ்வேன்; கடு
மான் மாற - விரைந்த செலவையுடைய குதிரையையுடைய மாறனே;
மறவா தீயே - நீ செய்த செயலை மறவா தொழிவாயாக எ-று.

     புதல்வர் மார்பிற் பொலிகெனக் கூட்டினுமமையும். “ஆலமர்
கடவுளன்னநின்”என்பதற்கு, ஆலின் கீழமர்ந்த முக்கட் செல்வனாகிய
கடவுளை யொப்ப என்றும், நிலைபெற்றிருப்பே னென்றிருக்கின்ற
நின்னென்றுரைப்பினு மமையும். “நின் முன்னோர் போல்கிவர் பெருங்
கண்ணோட்ட”மென்றது, அவரும் வழங்காது வைத்தலின் கண்ணோட்ட
மிலர்; இவரும் அவரை யொக்கக் கண்ணோட்ட மிலராத வென்பதாயிற்று.
“முன்னோர் போல்கிவர்பெருங் கண்ணோட்ட மெனவும், “வாழ்க நின்
கண்ணி”யெனவும், ”ீடு வாழிய”ரெனவும் நின்றவை குறிப்பு மொழி;
அன்றி, என்னிடத்து நீ செய்த கொடுமையால் நினக்குத் தீங்கு வரும்; அது
வாராதொழிகவென வாழ்த்தியதூஉமாம். “மறவாதீமே”என்றது, என் அளவில்
நீ செய்த செய்தியை மறவா தொழி யென்பதாயிற்று. யாண்டும் நாளும் பெருதி
யென்பதற்கு, நின்னாளே திங்களனையவாக; அத்திங்கள் யாண்டோ
ரனையவாக; ஆண்டே ஊழி யனைய வரம்பினவாக என்பது கருத்தாகக்
கொள்க.

     விளக்கம்: அருவியை ஆரமாக உருவகஞ் செய்தல்போல, ஈண்டு,
ஆரம் அருவியாகக் கூறப்பட்டது. தெய்வம்போலப் பெய்யென மழை
பெய்யும் கற்பு மாண்புடைய ளென்றதற்குக் “கடவுள் சான்ற கற்பின் சேயிழை
மடவோள்”என்றார்; “கடவுட் கற்பின் மடவோள்”(அகம்.314) எனப் பிறரும்
கூறுவர். பவழமணிபோலும் சிவந்த வாய் என்றற்கு “மணிமருள் அவ்வாய்”
என்றார்; சான்றோரும், “மணிபுரை செவ்வாய்”(அகம்.66) என்று சிறப்பித்தல்
காண்க. நனவு முற்றும் பரிசிலையே நினைந்தும் பேசியும் இருத்தலின்,
“கனவிலும் அரற்றும் என்காமர் நெஞ்சம்”என்றார். ஆலமர் கடவுளென்றது,
முக்கட் செல்வனையும் குறிக்குமாயினும், உரைகாரர் ஆலியையின்கண்
மேவிய திருமாலைக் குறிப்பதாகக் கொண்டார். ஆரமொடு பொலிந்த
மார்பும், அதன்பால் வேட்கை தணியாது