பக்கம் எண் :

433

 

பழங்களை யுண்டு செல்லும் புள்ளினம், விதைகளைப் பல்வேறிடங்களிற்
சொரிந்து பழுமரத்தின் இனத்தைப் பல்குவிப்பது போல, இரவலரும்
தமக்குப் பரிசில் தந்து சிறப்பிப்பார் புகழை நாட்டின் பல்வேறிடங்களிலும்
பரப்பி, ஆங்காங்கு வள்ளன்மை யுடையாரைத் தோற்றுவிப்பர்; அச் செயல்
வாயிலாக வலியும் படையு முடையார்பால் தொகும் பொருள்
அவையில்லார்க்குப் பயன்பட்டு  உலக  வாழ்வைச்  செம்மைப்படுத்தும்
என்பது கருத்து. இதனாற்றான், “கலிகொள் புள்ளினம் அனையர்
இரவலர்”என்றார். மேலும், வள்ளியோரைச் சூழ்ந்திருக்கும் புலவர் முதலிய
இரவலர், அவர் வழங்குதற் கேதுவாகும் பொருளைத் தம் பொருளாகக்
கருதி, அது பயன்படாது கெடாவாறு செய்வன செய்தற்குரிய உறுதி
கூறுதலும், அவர் பொருளின்றி வறியராகிவழித் தாமும் உடனிருந்து
வறுமைத் துன்பத்தை நுகர்ந்து, அஃது அவர்க்குத் தோன்றாவாறு தகுவன
கூறுதலும் அவர் செயலாதல்பற்றி, “அனைய”ரென் றொழியாது,
“பெருஞ்செய் யாடவ ருடைமையாகு மவருடைமை, அவரின்மையாகு
மவரின்மையே“ என்றார். வள்ளியோர்க்குப் பொருளுறுதி காட்டும்
நலத்தைச் சான்றோர்களாகிய குடபுலவியனார், உறையூர் முது கண்ணன்
சாத்தனார் முதலியோராலும், அவரின்மை தமதாகக் கருதிப் பேணும்
நலத்தைக் கபிலர், பிசிராந்தையார், ஏணிச்சேரி முடமோசியார் முதலிய
சான்றோர்களாலும் அறிக. இரவலரை வாழ்த்துவது ஈண்டுக்
கருத்தன்மையின், “வாழியோ”என்ற விடத்து வாழியும் ஓவும் அசைநிலை
யாயின.

200. விச்சிக்கோ

     விச்சிக்கோ என்பான், இளங்கண்டீரக்கோவோடு நட்புற்று
அவனோடிருந்து, பெருந்தலைச் சாத்தனாரால் தெருட்டப்பட்ட
இளவிச்சிக்கோவுக்கு முன்னோன். விச்சி யென்பது ஒரு மலையின் பெயர்.
இதனைச் சூழ்ந்த நாடு விச்சி நாடென்றும் இந் நாட்டவர் விச்சியரென்றும்
சான்றோர் கூறுப. “வில்கெழு தானை விச்சியர் பெருமகன்”(குறுந். 328))
என்று ஆசிரியர் பரணர் குறிப்பது காண்க.

     பாரி யிறந்தபின், அவன் மகளிரைக் கொணர்ந்து திருக்கோவலூரில்
பார்ப்பாரிடத்தே அடைக்கலப்படுத்திய கபிலர், அவர்களைத் தக்க அரச
குமரர்கட்கு மணம்புரிவித்தல் கருதி, இந்த விச்சிக்கோவை யடைந்தார்.
விச்சிக்கோவும்      பாரி      மகளிரை      மணந்துகோடற்குரிய
தகுதியுடையனாயிருந்தான்.  விச்சிக்கோவும்   கபிலரை  வரவேற்றுச்
சிறப்பித்தான். அவர் அவனை நோக்கி, “விச்சிக்கோவே! யான்
கொணர்ந்திருக்கும் இம் மகளிர், முல்லைக்கு நெடுந்தேர் அளித்த
பரந்தோங்கிய சிறப்பினையுடைய வேள்பாரியின் மகளிர். யானொரு
பரிசிலன்;அந்தணன், யான் மகட்கொடை புரிதற்குத் தகுதியுடையேன்;
இவரை மணந்து கோடலே யான் நின்பால் பெறும் பரிசில்”என்ற
கருத்துப்படும் இப்பாட்டைப் பாடினார்.

 பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரற் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்துசேண் விளங்கி
மழைமிசை யறியா மால்வரை யடுக்கத்துக்