| 5 | கழைமிசைத் துஞ்சுங் கல்லக வெற்ப | | நிணந்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேற் களங்கொண்டு கனலுங் கடுங்கண் யானை விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை | 10 | நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும் | | கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர் யானே, பரிசிலன் மன்னு மந்தண னீயே வரிசையில் வணக்கும் வாண்மேம் படுநன் | 15 | நினக்கியான் கொடுப்பக் கொண்மதி சினப்போர் | | அடங்கா மன்னரை யடக்கும் மடங்கா விளையு ணாடுகிழ வோயே. (200) |
திணை: அது. துறை: பரசிற்றுறை. பாரி மகளிரை விச்சிக் கோனுழைக்கொண்டு சென்ற கபிலர் பாடியது.
உரை: பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் கனி - குளிர்ந்த மலையின்கண் ஓங்கிய பசிய இலையையுடைய பலாவினது பழத்தை; கவர்ந்துண்ட கருவிரல் கடுவன் - கவர்ந்துண்ட கரிய விரலையுடைய கடுவன்; செம்முக மந்தியொடு சிறந்து - சிவந்த முகத்தையுடைய தனது மந்தியுடனே பொலிந்து; சேண் விளங்கி சேய்மைக்கண்ணே விளங்கி; மழை மிசை யறியா மால்வரை யடுக்கத்து - முகிலாலும் உச்சி யறியப்படாத உயர்ந்த மலைப் பக்கத்து; கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப - மூழ்கிலுச்சியின்கண் துயிலும் மலையகத்துத் தாழ்ந்த வரையை யுடையோய்; நிணம் தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடு வேல் - நிணத்தைத் தின்று களித்த நெருப்புப்போலும் தலையையுடைய நெடிய வேலினையும்; களம் கொண்டு கனலும்: கடுங்கண் யானை - களத்தைத் தனதாக்கிக்கொண்டு காயும் தறுகண்மையையுடைய யானையினையும்; விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக்கோவே - விளங்கிய மணிகளால் செய்யப்பட்ட வளைந்த ஆபரணத்தினையுமுடைய விச்சிக் கோவே; இவர் - இவர்கள்தாம்; பூத்தலை அறாஅப் புனை கொடி முல்லை - பூவைத் தனது தலையின்கண் மாறாத அலங்கரித்தாற்போலும் கொடி முல்லைதான்; நாத் தழும்பு இருப்பப் பாடா தாயினும் - நாத் தழும்பேறப் படாதாயினும்; கறங்கு மணி நெடுந் தேர் கொள்க எனக் கொடுத்த - ஒலிக்கும் மணியையுடைய நெடிய தேரைக் கொள்க வென்று சொல்லிக் கொடுத்த; பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர் - பரந்து மேம்பட்ட தலைமையினையுடைய பாரிக்கு மகளிர்; |