பக்கம் எண் :

55

    

நீண்ட கரையெடுத்து  நீரைத்  தேக்கி  வேண்டுமளவிற்  பயன்படுமாறு
கட்டிவைத்தலைத்தளைத்தலஎன்கின்றார். உயிரும் உடம்பும் படைத்தல்
அறம்; வேந்தர் தோள்வலி முருக்குதல்பொருள்; நல்லிசை நிறுத்தல்
இன்பம்இவ்வகையால் அறமுதல் மூன்றும் கூறப்பட்டனவாம்.

19. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்

    ஆசிரியர் குடபுலவியனார்,இந் நெடுஞ்செழியன் தலையாலங் கானத்துச்
செருவென்று வந்திருக்க அவனைக் காண்பது கருதி வந்தார். அவரையும்
அவன் அன்போடு வர வேற்றுக்   தழீஇக்   கொண்டான்.   அவனால்
தழுவப்பட்ட இச் சான்றோர் அவனது பேரன்பை வியந்து,  “செழிய, நின்
மார்பு புலியைப் படுப்பது குறித்து வேட்டுவன் கல்லிடத்தே சேர்த்திய
அடாரையும் ஒக்குமென்று கருதிப் புல்லினேன்;    எம்  போல்வார்க்கு
இன்பமும் பகைவர்க்குத் துன்பமும் பயப்பது நின் மார்பு” என்று பாராட்டி,
அவனது போர்ச் செயலைச் சிறப்பித்துரைகின்றார்.

 இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
5.இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய
 பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி
முயங்கினெ னல்லனோ யானே மயங்கிக்
குன்றத் திறுத்த குரீ இயினம் போல
அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத்
10.தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
  நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த வேந்துவாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலு முளகொ னமக்கென
15. மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்
  கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே. (19)

     திணை : வாகை; துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது.

     உரை : இமிழ்   கடல்  வளைஇய -  ஒலிக்கும்  கடலாற்
சூழப்பட்ட; ஈண்டு அகன் கிடக்கை - அணுச் செறிந்த அகன்ற
உலகத்துக்கண்; தமிழ்