பக்கம் எண் :

67

    
 கடிமரந் துளங்கிய காவு நெடுநகர்
10. வினைபுனை நல்லில் வெவ்வெரி யினைப்பக்
 கனையெரி யுரறிய மருங்கு நோக்கி
நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென்
றின்னு மின்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோனென
15.ஞால நெளிய வீண்டிய வியன்படை
  ஆலங் கானத் தமர்கடந் தட்ட
கால முன்பநிற் கண்டனென் வருவல்
அறுமருப் பெறிகலை புலிப்பாற் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
20. பூளை நீடிய வெருவரு பறந்தலை
 வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளி லத்த மாகிய காடே. (23)

     திணையும் துறையும் அவை. துறை:  நல்லிசை  வஞ்சியுமாம்.
பாண்டியனதலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனைக்
கல்லாடனார் பாடியது. 

உரை:  வெளிறில் நோன்  காழ்  பணை - வெண்மையில்லாத
வலிய     வயிரக்   கம்பத்தையுடைய     கூடத்தில்;  நிலை
முனைஇ - நிற்றலை வெறுத்துச் சென்று; களிறு படிந் துண்டென -
யானை படிந்து  நீருண்டதாக;  கலங்கிய  துறையும் -  கலக்கமுற்ற
துறையையும்; கார் நறுங்   கடம்பின்   பாசிலைத்   தெரியல் -
கார்காலத்து நறிய கடம்பினது பசிய    இலையோடு    விரவிய
மாலையையுடைய; சூர் நவை முருகன் சுற்றத் தன்ன - சூரபன்
மாவைக் கொன்ற முருகனது கூளிச் சுற்றத்தை யொக்கும்; நின்
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் - நின்னுடைய கூரிய நல்ல
அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்; கொள்வது
கொண்டு - தம்மால் கொள்ளலாவதனை முகந்துகொண்டு; கொள்ளா
மிச்சில் - கொள்ளாத ஒழி பொருளை; கொள்பதம் ஒழிய வீசிய
புலனும் - மாற்றார் முகந்துகொள்ளப்படும் உணவாக்காமல் சிதறிய
நிலங்களையும் - வடி நவில் நவியம் பாய்தலின் - வடித்தல் பயின்ற
கோடாலி வெட்டுதலான்; ஊர் தொறும் கடிமரம் துளங்கியகாவும் -
ஊர்தோறும் காவல் மரங்கள் நிலைகலங்கிய காவையும்; நெடு நகர்
வினை புனை நல்லில் - நெடிய நகரின்கண் தொழில் புனைந்த
நல்ல மனைகளிடத்து; வெவ் வெரி இனைப்ப - விரும்பும் அடு
தீயைக் கெடுக்க; கனை எரி உரறிய மருங்கும் - மிக்க தீ முழங்கிய
பக்கத்தையும்; நோக்கி - பார்த்து; நண்ணார் நாண -