| பகைவர் நாண; நாடொறும் தலைச் சென்று - நாடோறும் அவரிடத்துச் சென்று;இன்னும் இன்ன பல செய்குவன் - இன்னமும் இத்தன்மையான பலவும் செய்குவன்; யாவரும் துன்னல் போகிய துணிவினோன் - யாவரும் தன்னை யணுகவொண்ணாத சூழ்ச்சித் தெளிவினையுடையோன்; என - எனக் கருதி; ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை - உலகம் பொறை யாற்றாது நெளியத் திரண்ட பரந்த படையினையுடைய; ஆலங்கானத்து அமர் கடந் தட்ட கால முன்ப - தலையாலங்கானத்தின்கண் போரை யெதிர் நின்று கொன்ற காலன்போலும் வலியையுடையோய்;நிற்கண்டனென் வருவல் - நின்னைக் கண்டேனாய் வந்தேன்; அறு மருப்பு எழிற் கலை - அற்ற கோட்டையுடைய பெரிய கலை; புலிப்பாற் பட்டென - புலியின் கண்ணே யகப்பட்டதாக; சிறு மறி தழீஇய தெறி நடை மடப்பிணை - சிறிய மறியை யணைத்துக் கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய மான்பிணை; பூளை நீடிய வெருவரு பறந் தலை - பூளை யோங்கிய அஞ்சத்தக்க பாழிடத்து; வேளை வெண்பூ கறிக்கும் - வேளையினது வெளிய பூவைத் தின்னும்; ஆளில் அத்தமாகிய காடு - ஆளற்ற அருஞ்சுரமாகிய காட்டு வழியே எ-று.
கால முன்ப, துறையும் புலனும் காவும் மருங்கும் நோக்கி, இன்னும் இன்ன பல செய்குவன் துணிவினோவென வுட் கொண்டு, காட்டின் கண்ணே நின்னைக் கண்டு, அக் காட்டுவழியே வந்தே னெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
வருவ லென்பது ஈண்டு இறந்தகாலப் பொருட்டாய் நின்றது. இவனைக் காணா முன்னே கண்டுவந்தே னென்றான், இவன் செய்த வென்றியெல்லாங் கண்டமையின். பாசிலைத் தெரியல் முருக னென வியையும். நவியம் பாய்த லென்பது கருவி கருத்தாவாய் நின்றது. கலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீஇய மடப்பிணை பறந்தலை வேளை வெண்பூக் கறிக்குமென்பது, அவன் பகைவரைக் கொன்றவழி அவர் பெண்டிர் தம் இளம் புதல்வரை ஓம்புதற்பொருட்டு இறந்து படாது அடகு தின்று உயிர் வாழ்கின்றா ரென்பதொரு பொருள் தோன்ற நின்றது.
இனி, துணிவினோ னென்று பிறர் சொல்ல வெனவும் கண்டனென் வருவ லென்பதனைக் காலமயக்கமாக்கிக் கலங்கிய துறை முதலாயினவற்றை நோக்கி இன்னும் இவ்வாறு பகைவர் நாட்டின்கண் மேற்செல்வனென நினைந்து காட்டிடத்தே நின்னைக் காணிய வந்தே னெனவும் உரைப்பாரு முளர்.
விளக்கம்: வெளிறு - வெண்மை; இன்மை யரிதே வெளிறு (குறள் 503) என்றாற் போல. புறத்தே வெளிறும் அகத்தே காழும். உடைய பணையன்று என்பதற்கு, வெளிறில் நோன்காழ்ப்பணைஎன்றார். கார்காலத்து மலர்ந்து மணங் கமழ்வது கடம்பு; இதுபற்றி, கார் நறுங்கடம்பு என்று கூறப்பட்டது; உரைகாரரும் கார்காலத்து நறிய கடம்பு என்றுரைத்தார். பகைவர் நாட்டுப் பொருளைக் கொள்ளை
|