| எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து |
10. | வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் |
| முண்டகக் கோதை யொண்டொடி மகளிர் இரும்பனையின் குரும்பைநீரும் பூங்கரும்பின் றீஞ்சாறும் ஓங்குமணற் குவவுத்தாழைத் |
15. | தீநீரோ டுடன்விராஅய் |
| முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும் தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய ஓம்பா வீகை மாவே ளெவ்வி புனலும் புதவின் மிழலையொடு கழனிக் |
20. | கயலார் நாரை போர்விற் சேக்கும் |
| பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய நின்று நிலை இயர்நின் னாண்மீ னில்லாது |
25. | படாஅச் செலீ இயர்நின் பகைவர் மீனே |
| நின்னொடு, தொன்று மூத்த வுயிரினு முயிரொடு நின்று மூத்த யாக்கை யன்னநின் ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்ந்த |
30. | இரவன் மாக்க ளீகை நுவல |
| ஓண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந் தாங்கினி தொழுகுமதி பெரும வாங்கது வல்லுநர் வாழ்ந்தோ ரென்ப தொல்லிசை |
35. | மலர்தலை யுலகத்துத் தோன்றிப் |
| பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே. (24) |