| முயற்சி வலியை வாழ்த்த; இரவல் மாக்கள் ஈகை நுவல - இரக்கும் பரிசிலர் நின் வண்மையைச் சொல்ல; ஒண்டொடி மகளிர் - ஒள்ளிய வளையையுடைய மகளிர்; பொலங்கலத் தேந்திய தண் கமழ் தேறல் மடுப்ப - பொற்கலத்தின்கண் ஏந்திய குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய மதுவை மடுப்ப அதனை யுண்டு; மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு; ஆங்கு இனிது ஒழுகு மதி - அப்படி இனிதாக நடப்பாயாக; பெரும-; அது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப - அவ்வொழுக்கம் வல்லவரை வாழ்ந்தோரென்று சொல்லுவர் அறிவுடையோர்; மலர்தலை யுலகத்துத் தோன்றி - பரந்த இடத்தையுடைய உலகத்தின்கண்ணே பிறந்து; தொல்லிசை செலச்செல்லாது - பழைய புகழ்தான் பரக்க வொழுகாது; நின்று விளிந்தோர் பலர் - நின்று மாய்ந்தோர் பலர், அவர் வாழ்ந்தோரெனப்படார் ஆதலான் எ-று.
மேல் எண்ணப்பட்ட பெயரெச்ச மூன்றும் மிழலை யென்னும் பெயர் கொண்டன; அவை உம் உந்தாய் நின்றன, முந்நீர்ப் பாயும் நல்லூர் என்க. உயிரினும் சிறந்த யாக்கை யன்ன வாளின் வாழ்நரெனக் கூட்டி, உயிர்க்கு யாக்கை போலவும், யாக்கைக் குயிர்போலவும் இன்றியமையாது இரண்டுமாயிருக்கின்ற வாளின் வாழ்நர் என்க. நின் குடியொடு மூத்த, நின் யாக்கை யன்ன, விழுத்திணைக்கண் உளராய, நின்னுயிரினுஞ் சிறந்த வாளின் வாழ்நரெனக் கூட்டினுமமையும்.
செழிய, நின் நாண்மீன் நின்று நிலைஇயர்; நின் பகைவர் மீன்படாஅச் செலீஇயர்; உலகத்துத் தோன்றி இசை செலச் செல்லாது விளிந்தோர் பலர். அவர் வாழ்ந்தோர் எனப்படார் ஆதலால், பெரும, வாழ்த்த, நுவல, மடுப்ப, மகிழ் சிறந்து இனிதொழுகு; அது வல்லுநரை வாழ்ந்தோ ரென்ப வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
தாங்கா விளையு ளென்பதூஉம் பாடம் ஆங்கது, ஒருசொல். ஆங்கசை நிலையுமாம் இனி, தொல்லிசையையுடைய உலகத்துத் தோன்றிமேற் சொல்லப்பட்ட நன்மைகள் தமக்குப் பரக்க வொழுகாது நின்ற விளிந்தோர் பலர் என வுரைப்பாருமுளர். இது நிலையாமை கூறி, இனி தொழு கென்றமையாற் பொருண்மொழிக் காஞ்சி.
விளக்கம்: தொழுவர் கடல் திரைமிசைப் பாயும் மிழலை, பரதவர் குரவைச் சீர்தூங்கும் மிழலை, மைந்தர் தலைக்கை தரூஉம் மிழலை என்ற விடத்து, பாயும், தூங்கும், தரூஉம் என நின்ற மூன்று பெயரெச்சங்களிலும் ஈற்றுஉம், உந்தாய், பாயுந்து, தூங்குந்து. தரூஉந்து என வந்தன. உம் முந்தாகும் இடனு மாருண்டே (தொல். இடை. 44) என்பர். சீர் - தாளம். சீர்தூங்குதலாவது தாளத்திற்கேற்ப ஒத்தறுத் தாடுதல். கடற்கானலிடத்துப் புன்னையின் வேர் நிலத்துக்குள் ஆழச்சென்று காற்றால் அலைப்புண்டு வீழ்ந்தொழியாமற் காக்க, இலைகள் காற்றிற் பறக்கும் நீர்த் துவலைகளை யேற்றுத் தழைப்பிக்கும் என்ற கருத்தால், தூவற் கலித்த புன்னை என்றாராக; அதற்குக் கடற்றுவலையாலே தழைத்த புன்னை யென உரை கூறப்பட்டது. துவலை, சிறுநுண் நீர்த்துளி. ஊர்களில் உறைவார்க்கு அவ்வூர் வருவாய் நிரம்பாதென்னுமாறு மிக நிறைந்த மக்களையுடைய ஊர்என்பதைத் தாங்கா உறையுள் ஊர் என்றார். தாங்கா
|