பக்கம் எண் :

73

    

விளையுளையுடையவூர் என்ற பொருளமைய, “தாங்கா விளையுள்” என்று
பாடமோதுதலுமுண்டு. சில பொருள்கள் பெறுதற்கரியன   எனக்   கருதி
இரப்போர்க்கு  ஈயாதொழிதலின்றி,  அரியனவற்றையும் ஈயும்   வண்மை
யுடையன் எவ்வி  என்பதை,   “ஓம்பா   ஈகை எவ்வி” என்றாராதலால்,
ஓம்பாமைக்குப்    பொருளைப்    பாதுகாவாமை      என்றுரைத்தார்.
வாய்த்தலைகளில்,  நீர்   வேண்டுமளவிற்செல்லவும்  வேண்டா விடத்து
நிறுத்தவும் வேண்டிக்  கதவுகள் அமைத்திருத்தல்  தோன்ற,  “புனலம்
புதவிள் மிழலை”  என்றார்.   புதவு -  கதவு. சேக்குதல்  -  தங்குதல்.
ஈண்டு   உறங்குதல் என்னும் பொருளதாயிற்று. ஒருவரை வாழ்த்துவோர்
அவர்   பிறந்த   நாளை வாழ்த்துதலும் மரபு. அதுபற்றியே, “நின் நாண்
மீன்   நிலைஇயர்”   என்றார்.   உயிர்க்கு   வளர்தலும்   தேய்தலும்
இல்லையாயினும்,    உயிரில்   வழி   அதுநின்ற      உடற்குவளர்ச்சி  
கிடையாதாகையால்,“உயிரொடு  நின்று மூத்தயாக்கை” யென்றார். ஆடு
குடி; ஆடு -   வென்றி.   மகிழ்சிறத்தற்   கேது    உண்டலாதலால்,
மடுப்ப மகளிர் அதனையுண்டு என்பதைப்  பெய்   துரைத்தார்.   இனி
தொழுகுமதி என்கின்றாராதலால், அதற்கு, நின்று விளிந்தோர் வாழ்ந்தோ
ரெனப்படாராதலான் என்பதை  ஏதுவாகக்   கூறினார்.  தொல்லிசையை
உலகத்துக்கேற்றி மலர்தலை  யுலகத்துத்  தோன்றிச்  செலச் செல்லாது
எனக்கொண்டு, “தொல்லிசையை..........பலர்” என்று கூறுதலு முண்டென்று
உரைத்தார்.

25. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்

     இப் பாண்டிவேந்தனை ஆசிரியர் கல்லாடனார், இப்பாட்டின்கண்,
இவன் தன்னொடு  பகைத்த வேந்தர்   இருவரைப்  பொருதழித்து
அவருடன் துணைவந்த பிறரையும் வென்று மேம்பட்ட   திறத்தை அப்
பகைவரிறந் தமையான் அவருடைய   மகளிர்   கூந்தல்   களைந்து
கைம்மை மேற்கொள்ளும் செயலைக் கூறிச் சிறப்பிக்கின்றார்.

 மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல
ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ
துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்
 5. குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை
 அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணிப்
பிணியுறு முரசங் கொண்ட காலை
நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச்
சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய
 10. முலைபொலி யாக முருப்ப நூறி
 மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர