| | அவிரறல் கடுக்கு மம்மென் குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே. (25) | திணை: வாகை; துறை: அரசவாகை; அவனைக் கல்லாடனார் பாடியது.
உரை : மீன் திகழ் விசும்பின் - மீன் விளங்கும் வானத்தின்கண்; பாய் இருள் அகல - பரந்த இருள் நீங்க; ஈண்டு செலல் மரபின்-ஓங்கிச் செல்லுதன் முறைமையையுடைய; தன் இயல் வழா அது - தனது தன்மையிற் பிழையாது; உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு - வலிய வெம்மை முறுகிய உட்குப் பொருந்திய ஞாயிறு; நிலவுத் திகழ்மதியமொடு - நிலா விளங்கும் திங்களுடைய; நிலம் சேர்ந்தா அங்கு - நிலத்தைப் பொருந்தினாற்போல; உடலருந் துப்பின் ஒன்று மொழி வேந்தரை - பகைத்தற்கரிய வலியையுடைய வஞ்சினங் கூறிய இரு வேந்தரை; அணங்கரும் பறந்தலை - வருத்துதற்கரிய போர்க்களத்தின் கண்ணே; உணங்கப் பண்ணி - மாயப் பொருது; பிணியுறு முரசம் கொண்ட காலை - அவருடைய வாராற் பிணிப்புற்று முரசத்தைக் கொண்ட காலத்து; நிலை திரிபு எறிய - நின்ற நிலையிலே நின்று - நின்னைச் சூழ்ந்துகொண்ட வீரரைப் புரிந்து எறிதலால்; திண் மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்று - திண்ணிய கொளுத்துக் கலங்கிக் கெடுதல் பிழைத்தது; நின் வேல் - நினது வேல்; செழிய-; முலை பொலி ஆகம் உருப்ப நூறி - முலை பொலிந்த மார்பம் அழல் அறைந்து கொண்டு; மெய்ம் மறந்து பட்டவரையாப் பூசல் - அறிவு மயங்கி உற்ற அளவற்ற அழுகை யாரவாரத்தையுடைய; ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர - ஒண்ணுதல் மகளிர் கைம்மை நோன்பிலே மிக; அவிர் அறல் கடுக்கும் - விளங்கும் அறலை யொக்கும்; அம்மென் குவை இருங் கூந்தல் - அழகிய மெல்லிய குவிந்த கரிய மயிரினை; கொய்தல் கண்டு - கொய்த பரிசைக் கண்டு எ-று.
செழிய, மகளிர் கூந்தல் கொய்தல் கண்டு, நின் வேல் சிதைதலுய்ந்த தெனக் கூட்டுக. ஈண்டுச் செலல் மரபெனவும், ஐம்பாற் குவை யிருங் கூந்தலெனவும் பாடமோதுவாரு முளர். உய்ந்தன்றோ; ஓ: அசை நிலை." விளக்கம்: ஞாயிறு மதியமொடு நிலஞ் சேர்ந்தது போல, பெருவேந்தர் இருவர் போரிற் பட்டனர்: அவர் சேரனும் சோழனுமாவர். உடலுதல் - பொருதல்; இதற்குக் காரணம் பகையாதலின், உடலருந்துப்பு, பகைத்தற்கரிய வலியாயிற்று. போர்க்களத்துப் பொரும் வீரர் உயிரிழத்தற்கும் புண்ணுற்று வருந்துதற்கும் அஞ்சாராதலின், போர்க்களம், அணங்கரும் பறந்தலை யெனப்பட்டது. மடை வேலினது மூட்டுவாய். வேலினுடைய இலையும் எறி பிடியும் ஆசிடை மடுத்துக் காய்ச்சிப் பற்றவைக்கப்
|