| 29. சோழன் நலங்கிள்ளி இப் பாட்டின்கண் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியை நோக்கி, வேந்தே, நின் திருவோலக்கத்தில் நின் புகழ் பாடும் பாணர் நிறைதல் வேண்டும்; பாணர் இசைகேட்ட பின்பு மகளிர் கூட்டத்தின் இன்பத்தை நீ நுகர்தல் வேண்டும்; கொடியோரைத் தெறுதலும், நல்லோரையளித்தலும் தவிராது நிலதல் வேவுண்டும்; இவற்றோடமையாது நீ சிற்றினம் சேர்த லாகாது; நீ வழங்கும் நாடு பெற்றுச் சிறக்கும் படைத்தலைவர் நின்பால் வருநர்க்கு உதவியாற்றும் நண்புடைப் பண்புடையராமாறு நின் செய்கை முறைப்பட வமைதல் வேண்டும். கூத்தாட் டவைக் குழாம்போலக் கூடுதலும் கழிதலுமுடையது இவ்வுலகம்; இதன்கண் நின் சுற்றத்தார் நினக்கு நகைப்புறமாக, நின் செல்வம் இசைப்புறமாக விளங்குதல் வேண்டும் என வற்புறுத்துகின்றார்.
| அழல்புரிந்த வடர்தாமரை ஐதடர்ந்த நூற்பெய்து புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல் பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப் | 5. | பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை | | பாண்முற் றொழிந்த பின்றை மகளிர் தோண்முற் றுகநின் சாந்துபுல ரகலம், ஆங்க முனிவின் முற்றத் தினிதுமுர சியம்பக் கொடியோர்த் தெறுதலுஞ் செவ்வியோர்க் களித்தலும் | 10. | ஒடியா முறையின் மடிவிலை யாகி | | நல்லத னலனுந் தீயதன் றீமையும் இல்லை யென்போர்க் கினனா கிலியர் நெல்விளை கழனிப் படுபுள் ளோப்புநர் ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு | 15. | வெங்கட் டொலைச்சியு மமையார் தெங்கின் | | இளநீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு பெற்றன ருவக்குநின் படைகொண் மாக்கள் பற்றா மாக்களிற் பரிவுமுந் துறுத்துக் கூவை துற்ற நாற்காற் பந்தர்ச் | 20. | சிறுமனை வாழ்க்கையி னொரீஇ வருநர்க் | | குதவி யாற்று நண்பிற் பண்புடை ஊழிற் றாகநின் செய்கை விழவிற் கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியுமிவ் வுலகத்துக் கூடிய | |