| வீர வுரைகள் இன்பந் தருவனவாகும். ஒருகால் அந்த நெடுங்கிள்ளி இளந்தத்த னென்னும் புலவனைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்றனெனப் பிறழக் கருதிக் கொல்ல நினைத்தானாக, அதனை யுணர்ந்த இக் கோவூர் கிழார் தகுவன கூறி உய்வித்தார்; கிள்ளிவளவ னென்பான் மலையமான் மக்களைப் பற்றி யானைக் காலிலிட்டுக் கொல்ல நினைப்ப, இச் சான்றோர். சிறுவர்களின் இயல்பு கூறி, அவன் நினைவை மாற்றினார்.
இத்தகைய சான்றோர் இப்பாட்டின்கண், சோழன் நலங்கிள்ளியின் வென்றி நலத்தைச் சிறப்பித்து, வேந்தே, நீ நல்லிசை வேட்டம் வேண்டிப் பாசறையில் இருப்பதற்கே விழைகின்றாய்; நின் யானைப் படை, பகைவர் அரண்களைச் சிதைத்தும் அடங்காவாய் மைந்துற்று நிற்கின்றன; போரெனிற் புகலும் நின் மறவர், பகைவர் நாடு காடிடையிட்டு நெடுந் தூரத்திலுள்ளதெனவறிந்தும் செல்லுதற் கஞ்சார்; இவ்வாற்றால், குணகடற் கரையையுடைய நீகுடகடல் அடைந்து பின் அங்கிருந்தே வடபுலம் நோக்கி வருவாயெனநினைந்து, வடபுலத்தரசர் இரவெல்லாம் உறக்கமின்றிக் கிடக்கின்றனர் எனப் பாடிப் பாராட்டுகின்றார்.
| சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை உருகெழு மதியி னிவந்துசேண் விளங்க | 5. | நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் | | பாசறை யல்லது நீயொல் லாயே நுதிமுக மழுங்க மண்டி யொன்னார் கடிமதில் பாயுநின் களிறடங் கலவே போரெனிற் புகலும் புனைகழன் மறவர் | 10. | காடிடைக் கிடந்த நாடுநனி சேய | | செல்வே மல்லே மென்னார் கல்லென் விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக் குணகடல் பின்ன தாகக் குடகடல் வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப | 15. | வலமுறை வருதலு முண்டென் றலமந்து | | நெஞ்சுநடுங் கவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே. (31) |
திணை: வாகை. துறை: அசரவாகை; மழபுல வஞ்சியுமாம். அவனைக் கோவூர் கிழார் பாடியது.
உரை: சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் - சிறப்புடை முறைமையால் பொருளும் இன்பமும்; அறத்து வழிப் படூஉம் தோற்றம்
|