| ஏரின் வாழ்நர் பேரி லரிவையர் |
5. | குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் |
| முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும் தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும் ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின் பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை |
10. | பாடுநர் வஞ்சி பாடப் படையோர் |
| தாதெரு மறுகிற் பாசறை பொலியப் புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த மலரா மாலைப் பந்துகண் டன்ன ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும் |
15. | செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை |
| வல்லோன் றைஇய வரிவனப் புற்ற அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக் காம விருவ ரல்லதி யாமத்துத் தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின் |
20 | ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி |
| வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே. (33) |