| | யானை தந்த முளிமர விறகிற் கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து மடமான் பெருநிரை வைகுதுயி லெடுப்பி மந்தி சீக்கு மணங்குடை முன்றிலின் | 5 | நீர்வார் கூந்த லிரும்புறந் தாழப் | | பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித் தெருமரு மம்ம தானேதன் கொழுநன் முழவுகண் டுயிலாக் கடியுடை வியனகர்ச் சிறுநனி தமிய ளாயினும் | 10 | இன்னுயிர் நடுங்குந்த னிளமைபுறங் கொடுத்தே. |
திணையும் துறையு மவை. அவள் தீப்பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயால் சொல்லியது.
உரை: யானை தந்த முளிமர விறகில் - யானை கொண்டு வரப்பட்ட உலர்ந்த மரத்து விறகால்; கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து - வேடர் மூட்டப்பட்ட கடைந்துகொள்ளப்பட்ட எரியாகிய விளக்கினது ஒளியின்கண்; மடமான் பெரு நிரை - மடவிய மானாகிய பெரிய நிரை; வைகு துயில் எடுப்பி - வைகிய உறக்கத்தை எழுப்பி; மந்தி சீ்கும் - மந்தி தூர்க்கும்; அணங்குடைத் தேவியுடைய முற்றத்து; நீர் வார் கூந்தல் இரும்புறம்தாழ - நீர் வடிந்த மயிர் மிக்க புறத்தில் வீழ;பேரஞர்க்கண்ணள் - பெரிய துன்பமேவிய கண்ணையுடையளாய்; பெருங்காடு நோக்கித் தெருமரும் - புறங்காட்டைப் பார்த்துத் தான் சுழலும்; தன் கொழுநன் - தன் தலைவன்; முழவுகண் துயிலா - முழவினது கண் மார்ச்சனை யுலராத; கடியுடைய வியன்நகர் சிறுநனி தமியளாயினும் - காவலையுடைய அகலிய கோயிலுள் மிகச் சிறிதுபொழுது தனித்திருப்பினும்; இன்னுயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்து - இனிய உயிர் தளரும், தன் இளமை புறங்கொடுத்து; எ - று.
...யான் அதற்கு அஞ்சி நடுங்குதல்...இளமை புறங்கொடுத்துப் பெருங்காடு நோக்கித் தான் தெருமரும் எனக் கூட்டுக. அம்ம: அசை.
விளக்கம்: காட்டில் வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்களைப் பழகிய யானைகளைக் கொண்டு கொணர்விப்பது இன்றும் நிகழும் நிகழ்ச்சி. தீ விளக்கத்தின்கண் மானிரை துயிலுவது இயல்பு; பிறரும், சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை, அந்தி யந்தண ரருங்கட னிறுக்கும், முத்தீ விளக்கில் துஞ்சும் (புறம்.2) என்பது காணக். அணங்கு - அணங்குடைய தேவி. முழவினை இடையறாது இசைத்தலால் சூடேறிக் கிழயாதபடி மார்ச்சனையை ஈரப்படுத்துதலால் முழவுகண் துயிலா என்றதற்கு முழவினது கண் மார்ச்சனையுலராத என்று உரை கூறப்பட்டது. படவே, |