முழவு எப்போதும் முழங்கிக்கொண்டிருக்கும் என்பதாம். இளமைக்குப் புறங்கொடுத்தலாவது இளமை யுணர்ச்சிகட்கு அடிமையாய் உணர்வு மடிந்தொழுகுதலெனக் கொள்க. காதலனொடு கூடி யுறையும் நலங்கனிந்த இளமகளிர்க்குப் பிரிவினும் துன்பந்தருவது பிறிதில்லை; இன்னாது இனனில்லூர் வாழ்தல் அதனினும், இன்னாது இனியார்ப் பிரிவு (குறள். 1158) என்று சான்றோர் உரைப்பது காண்க. ---
248. ஒக்கூர் மாசாத்தனார் ஒக்கூர் என்ற பெயருடைய ஊர்கள் சோழ நாட்டிலும் பாண்டி நாட்டிலும் உள்ளன. மாசாத்தன் என்பது இவரது இயற்பெயர்.மாசாத்தியார் என்னும் சான்றோர் ஒருவரும் இவ்வூரில் தோன்றியிருந்திருக்கிறார். சாத்தனார் பாடிய பாட்டுக்கள் ஏனைத் தொகை நூல்களிலும் உண்டு. சிறப்புடைய தன் கொழுநன் மாய்ந்தானாக, ஒருவன் மனவைி உடனுயிர்விடுதலை மேற்கொள்ளாது கைம்மை நோன்பினை மேற்கொண்டொழுகலானாள். அதனால் மறுபிறப்பில் தன் காதலனையை கூடிவாழும் வாழ்க்கையெய்தும் என்பது கருத்து. இவனை மணிமேகலை யாசிரியர், அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர் (மணி. 3: 46-7) என்பது காண்க. இக் கைம்மை மகள் ஒருகால் ஒருகால் ஆம்பலை நோக்கினாள். இளமைக்காலத்தில் அந்த ஆம்பல் தழை தொடுத்தணிதற்குப் பயன்பட்டதும். கைம்மைக் காலத்தில் புல்லரிசி யுதவுவதாயதும் கண்டு வருந்திக் கூறினாள். அக் கூற்றினை மாசாத்தனார் இப்பாட்டின்கண் நமக்குரைக்கின்றார். | அளிய தாமே சிறுவெள் ளாம்பல் இளைய மாகத் தழையா யினவே, இனியே பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத் தின்னா வைக லுண்ணும் | 5 | அல்லிப் படூஉம் புல்லா யினவே. |
திணை: அது. துறை: தாபத நிலை...ஓக்கூர் மாசாத்தனார் பாடியது.
தாபதநிலையாவது குருந்தலர்க் கண்ணிக்கொழுநன் மாய்ந்தெனக், கருந்தடங் கண்ணி கைம்மை கூறின்று (பு. மா. சிறப். பொது. 4)
உரை: அளிய சிறு வெள்ளாம்பல் - இரங்கத்தக்கன சிறிய வெளிய ஆம்பல், இளையமாக - அவை தாம் யாம் இளையேமாயிருக்க; தழையாயின- முற்காலத்துத் தழையாயுதவின; இனியே இக்காலத்து; பெருவளக் கொழுநன் மாய்ந்தென - பெரிய செல்வத்தையுடைய தலைவன் இறந்தானாக;பொழுது மறுத்து- உண்ணுங்காலை மாறி; இன்னா வைகல் உண்ணும் - இன்னாத வைகும் பொழுதின்கண் உண்ணும்; அல்லிப்படூஉம் புல்லாயின - தம் அல்லியிடத்துண்டாம் புல்லரிசியாய் உதவின; எ - று. |