| ஆடி வேட்டுப் புலர்த்துவோன் என இயையும். முன்பு இழைநெகிழ்த்த மள்ளற் கண்டேம்; அவன் இப்பொழுது புறந்தாழ்புரிசடை புலர்த்தா நின்றான் என அவனைக் கண்டு வியந்துகூறியவாறு. பாவை யென்றது பிறிது எவ்வுணர்வுமின்றிக் காமவேட்கையாகிய ஒரு குறிப்பினை. கானயானை தந்தவிறகென்றது, இவன் தவ மிகுதியான், அதுவும் ஏவல் செய்தல்.
விளக்கம்: ஓவம், ஓவியம். உரையாசிரியரான பேராசிரியர், ஓவத்தன்ன இடனுடைய வரைப்பின் என்புழி அந் நகரினதுசெயற்கை நலந்தோன்றக் கூறினமையின், அதற்கு நிலைக்களன்நலனாயிற் (தொல். உவ. 4) றென்பர். பூவெனப்படுவது தாமரையாதல் போலப் பாவை யென்றது கொல்லிப்பாவைக்காயிற்று. கொல்லிப் பாவை, கொல்லிமலையில் பூதத்தாற் காமக் குறிப்புக் கிளரப் புணர்க்கப்பட்ட பாவை. குறுந்தொடி யென்றதில் குறுமை மகளிரது இளமை யுணர்த்திற்று. மள்ளன்என்றது, மகளிர் தொடி நெகிழ்ந்து வருந்தத் தான் வருந்தாதொழுகிய சிறப்புப்பற்றி. மள்ளன் இளையனுமாம். கழைக்கண் - மூங்கில் வளரும் இடம். கானயானை, தொழிற் பயிற்சியின்றிக்கொன்னே காட்டில் பிறந்து வளர்ந்த யானை; இத்தகையயானையும் அவன் தவமிகுதியால் ஏவல் செய்வது உணர்த்தியவாறாயிற்று செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்களிறு தருவிற்கின்...மலைகிழ வோனே (பெரும் பாண். 498 - 500) என்றுபிறரும் குறிப்பது காண்க. புரிசடை: இறந்தகாலந் தொக்கவினைத்தொகை. புரிசடை புலர்தற்குக் கடுந்தெறல் செந்தீதுணை யாதல் அறிக. கண்டிகும்: இறந்தகாலத் தன்மைவினைமுற்று. ---
252. மாரிப்பித்தியார் மேலே கண்ட தமிழ்த்தாபதன், மகளிர் இழை நெகிழ்த்துக் காமக்கலவிப் போரில் திண்மையுடையனாய் விளங்கிய திறத்தை யெடுத்தோதிக் காட்டில் அவன் தவமேற்கொண்டொழுகுவதை மாரிப்பித்தியார் இனிய பாட்டால் பாராட்டியது கேட்டசான்றோர் சிலர், இத்தாபதன் பண்டு மணம்புரிந்து இல்வாழ்ந்த காலத்தில் ஒழுகிய திறம் யாது? என்று வினவினர். அதனையும் நன்கறிந்தவராதலால், மாரிப் பித்தியார், சொல்வேன், கேண்மின் எனவுரைத்து அவனைக் காட்டினார். அவன் அருவியில் பலகாலும் நீராடுதலால் அவன் தலையிலுள்ள சடை தில்லந்தளிர்போல புற்கென்று பொலிவிழந்து காணப்பட்டது. அவன் ஆங்காங்குச் செறிந்திருந்த தாளியிலையைப் பறித்துக்கொண்டிருந்தான். மனைவாழ்வில் இவன் தன் மனையாள்பால் பேராக் காதலுடையனாய் ஒழுகினான். ஓதுவது குறித்தும் பொருள் குறித்தும் பகை தணிக்கும் வினை குறித்தும் போர் மேற்கொண்ட வேந்தரிடையே சந்து செய்தற்கும் இவன் பிரிந்தொழுகியதுண்டு. இவன் மனையாள் இவனது பிரிவைச் சிறிதும் ஆற்றாத சிறந்த காதலுடையள். பிரியுங்கால் அவள் தெளியத்தக்க சொற்களைச் சொல்லித் தன் பிரிவை ஆற்றியிருக்குமாறு பண்ணினான்; அவட்குத் தன்பால் ஊடலுண்டாயினும்அவ் வூடலில் தேனும் பாலும் போலும் செஞ்சொற்களை வழங்கிஅவளைத் தெளிவித்துத் தன் சொல்வழி யமைந்தொழுகுமாறு பண்ணினான். இவ்வாறு தன்னுடைய இனிய |