பக்கம் எண் :

109

     

சொற்களால் தன்மனையாளின் மனத்தைத் தன்பாற் பிணித்து நல்லறம்
புரிந்தான்” என்ற கருத்தமைய இந்தப் பாட்டைப் பாடிக் காட்டினார்.

 கறங்குவெள் ளருவி யேற்றலி னிறம்பெயர்ந்து
தல்லை யன்ன புல்லென் சடையோ
டள்ளிலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
5சொல்வலை வேட்டுவ னாயினன் முன்னே.

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.

     உரை: கறங்கு   வெள்ளருவி  யேற்றலின் - ஒலிக்கும்
வெள்ளியஅருவிநீரை ஏற்றலால்; நிறம் பெயர்ந்து - பழைய நிறம் மாறி;
தில்லை அன்ன புல்லென் சடையோடு - தில்லந்தளிர் போன்றபுற்கென்
சடையோடு கூடி நின்று, அள் இலைத் தாளிகொய்யுமோனே - செறிந்த
இலையையுடைய தாளியைப்பறிப்போன்; இல் வழங்கும் மடமயில்
பிணிக்கும்- மனையின்கண் இயங்கும் மடப்பத்தையுடைய மயிலை
அகப்படுத்திக்கொள்ளும், சொல் வலை வேட்டுவனாயினன் முன் -
சொல்லாகிய வலையையுடைய வேட்டைக் காரனாயினன் முன்பு;
எ - று.


     இதுவும் அவன் நிலைமையைக் கண்டு வியந்து கூறியது.

     விளக்கம்: கல்லலைத்து இழுமெனும் ஓசையுடன் வீழும்
அருவிதெளிவாய் வெள்ளிதாதலால், “கறங்கு வெள்ளருவி” யென்றார்.
பெயர்ந்தெனவே பழைய நிறம் மாறின்மை பெற்றாம். அள்ளிலை- செறிந்த
இலை. மனையாளை மயில் என்றமையின்; அதற்கேற்பத் தன்னையின்றி
யமையாதவளாகச் செய்த மள்ளனை, “மயில்பிணிக்கும் சொல் வலை
வேட்டுவனாயினன்” என்றார். “வேட்டுவனாயினன் முன்னே” என்றதனால்
இப்போது சடையோடு தாளி கொய்வோனாயினன் என்றார். கொய்யுமோன்
என்றதே நிகழ் கால முணர்த்தி நிற்றலின் இப் போழ்தெனக் கூறாராயினர்.
இதனை “நாலிரு வழக்கிற் றாபதப் பக்கம்” (தொல். புறத். 5) என
இளம்பூரணர் காட்டுவர். பேராசிரியர் இதனைப்பிறன்கட்டோன்றிய அசைவு
பற்றிய அவலச் சுவைக்கு (மெய். 5) மேற்கோளாகக் காட்டுவர்.
கொய்யுமோன் முன்னேவேட்டுவனாயினன் என இயையும்.

253. குளம்பந்தாயனார்

     தாயனார் என்பது இப் பாட்டினைப் பாடிய ஆசிரியர் இயற்பெயர்.
இவர் தந்தை பெயர் குளம்பன் என்பது. குளம்பன் மகன்தாயனார் என்பது
குளம்பந்தாயனார் என வந்தது; குளம்பன்என்னும் இயற் பெயர் மக்கள்
முறையில் தாயனார் என்ற பெயர்வரவே, ஈற்று அன்சாரியை கெட்டு
அம்மென்னும் சாரியைபெற்றுக் குளம் பந்தாயனாரென வரும்; இதற்குவிதி,
“அப்பெயர்மெய்யொழித்து அன்கெடு வழியும், நிற்றலும் உரித்தே
அம்மென்சாரியை. மக்கள்முறை தொகூஉம் மருங்கி னான” (பள்ளி. 55)
தொல்காப்பியனார் கூறுவதனால் அறியலாம். குளம்பன்என்னும்