பக்கம் எண் :

11

     
5தெண்ணீர்ப் பரப்பி னிமிழ்திரைப் பெருங்கடல்
 உண்ணா ராகுப நீர்வேட் டோரே
ஆவு மாவுஞ் சென்றுணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத் தாயினும்
உண்ணீர் மருங்கி னதர்பல வாகும்
10புள்ளும் பொழுதும் பழித்த லல்லதை
 உள்ளிச் சென்றோர்ப் பழியல ரதனாற்
புலவேன் வாழிய ரோரி விசும்பிற்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.

     திணையும்துறையு மவை.  வல்வில்ஓரியைக்கழைதின்
யானையார் பாடியது.


    உரை:ஈ என இரத்தல் இழிந்தன்று - இழிந்தோன் கூற்றால் ஈ
எனச் சொல்லி  யிரத்தல் இழிந்தது; அதன் எதிர் ஈயேன் என்றால்-
அவ்வீயென்ற   தன்  எதிர்   ஈயேன் என்று   சொல்லிமறுத்தல்; 
அதனினும்  இழிந்தன்று - அவ்விரத்தலினும் இழிந்தது; கொள் எனக்
கொடுத்தல்    உயர்ந்தன்று - ஒருவன்  இரப்பதன்   முன்னே 
அவன்  குறிப்பை  முகத்தான் உணர்ந்து இதனைக் கொள்வாயாக என்று
சொல்லித் தான்இரந்து கொடுத்தல் ஒருவற்கு உயர்ந்தது; அதன் எதிர்
கொள்ளேன் என்றல் - அதனை அவன்  அவ்வாறு கொடுப்ப
அதன் எதிர்  கொள்ளேனென்று  சொல்லி  மறுத்தல்; அதனினும்
உயர்ந்தன்று -அக் கொடையினும் உயர்ந்தது; தெள்நீர் பரப்பின்
இமிழ்திரைப்   பெருங்கடல்-   தெளிந்த    நீர்ப்பரப்பான்
ஒலிக்கும்   திரையையுடைய   பெரிய   கடல்நீரை; உண்ணாராகு
நீர்வேட்டோர் -   உண்ணாராவர்  தண்ணீரை   விரும்பினோர்;
ஆவும் மாவும்  சென்றுணக் கலங்கி - ஆவும்  மாவும்   சென்று
நீரையுண்ணக்  கலங்கி; சேறொடுபட்ட    சிறுமைத்தாயினும் -
சேற்றொடு  கூடிய  சிறுமையை   யுடைத்தேயாயினும்;   உண்ணீர் 
மருங்கின் அதர் பலவாகும் - உண்ணு நீரையுடைய தாழ்ந்தவிடத்துச்
செல்லும் வழி பலவாகும்; புள்ளும் பொழுதும் பழித்தல்அல்லதை -
தாம்புறப்பட்டுச்செல்லப்பட்டவழியிடத்துஅப்பொழுது  செய்யும்  
புள்   நிமித்தத்தையும்   புறப்பட்ட    முழுத்தத்தையும்  
பழித்தலல்லது;  உள்ளிச்  சென்றோர்ப்   பழியலர் - தாம்
பரிசில் பெறக் கருதிச் செல்லப்பட்டோரை அவர் ஈத்திலராயினும்
பரிசிலர் பழியார்; அதனால்  புலவேன்-  அதனால்  நீஎனக்கு
இன்னையாயினும்  வெறேன்; வாழியர் ஓரி-வாழ்வாயாக  ஓரி;  
விசும்பில்  கருவிவானம்ே  பால - ஆகாயத்தின்கண் மின் முதலிய
தொகுதியையுடைய மழைபோல; வரையாது சுரக்கும் வள்ளியோய்
நின்னே - யாவர்க்கும்