பக்கம் எண் :

12

     

எப்பொருளையும் வரையாது வழங்கும் வண்மையையுடையோய் நின்னை;
எ - று.

    ஓரி, வள்ளியோய், பரிசிலர் புள்ளும் பொழுதும் பழித்தலல்லது
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால் யானும் நின்னைப் புலவேன்,
வாழியர் எனக் கூட்டுக.

    மேற்கூறிய இரத்தல்முதல்நான்கிற்கும்ஈயெனஇரத்தலால்
இழிவுபெற்று, கொள்ளேன் என்னும் உயர்வு யான் பெற்றிலேன் என்பதூஉம்,
அவ்வாறு இரப்பவும், ஈயேன் என்றாற்போலப் பரிசில் நீட்டித்தலால் உள்ள
இழிபுபெற்று, கொள்ளெனக்   கொடுக்கும்  உயர்ச்சி  நீபெற்றிலை
யென்பதூஉம்கருத்தாகக்கொள்க. இதனால் ஈயேனென்னும் இழிபினும்
கொள்ளெனக் கொடுக்கும் உயர்பினும் நினக்குத் தக்கதறிந்து செய்யென்பது
கூறினாராம்.

    “பெருங்கடல் உண்ணாராகுபநீர்வேட்டோர்”என்பதனாற்
செல்வரேயாயினும் வள்ளியோரல்லார்பாற் செல்லேனென்பதூஉம், “உண்ணீர்
மருங்கின் அதர்பல வாகும்” என்பதனால் நீ வள்ளியை யாகலின் நின்பால்
வந்தேன் என்பதூஉம் கொள்ளப்படும்.

    விளக்கம்: ஈயென இரத்தலும், ஈயேன் என மறுத்தலும் இழிவென்றும்,
இரப்போர்குறிப்பறிந்துகொள்ளெனக்கொடுத்தலும், கொடுத்த வழிக்
கொள்ளேன் என மறுத்தலும் உயர்வு என்றும் எடுத்தோதி இவ்விரண்டனுள்
நீவிரும்புவதொன்றனைச்செய்க  எனஆசிரியர் கழைதின்யானையார்
வல்விலோரிக்குக்கூறுகின்றார். இரத்தலின்இழிவுவிளங்க இழிந்தோன்
கூற்றால் ஈயெனச் சொல்லி யிரத்தல் இழிந்ததென்றார், “ஈயென் கிளவி
யிழிந்தோன் கூற்றே” (தொல். எச்ச. 49) என்பவாகலின், இழிவு பயக்கும்
இன்மைச்சொல்லச்சொல்லியிரப்பார்க்குஇன்மையுண்மையான்
இரத்தலாலுண்டாகும்இழிவன்றிப்பிறிதில்லை;ஈயேனென்ன மறுக்கும்
செல்வர்க்குத் தாமுடைமையை மறைத்துப் பொய்ம்மொழிந்து, அவ்வின்மைச்
சொல்லாற் பிறக்கும் இழிவையும் மேற்கொண்டு அதனைக் கூறி மறுத்தலால்,
இலன்என்னும்எவ்வமும், பொய்ம்மொழியால் உளதாகும் இழிதகவும்
ஆகியமிக்க  இழிவுஉண்டாதல்  பற்றி, “ஈயேனென்றல் அதினினும்
இழிந்தன்று” என்றார். ஏற்பார்பால் ஈயென்னும் சொல் பிறவாமையின்,
கொள்னெனச் சொல்லி கொடுத்து ஏற்பிப்பதால், செல்வர்க்குப் பிறர்பால்
உளதாகும்இழிவைமறைத்து  ஓம்புதலாற்  புகழ்உண்டாகி  உயர்வு
தருதலின், “கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று” என்றார். தான் இரந்து
கொடுத்தலாவது ஏற்பாரைத் தான் பணிந்து நின்று தான் கொடுப்பதை
ஏற்பித்தல்; இப் பணிவு செல்வர்க்குப் பெருஞ் செல்வமாம் தகைமையினை
யுடையதெனத் திருவள்ளுவர் கூறுவர். கொள்ளேன் என்பதாற் பிறக்கும்
பெருமிதம், கொடுக்கப்படும் பொருள் பிறர்க்குக் கொடுக்கப்பட்டுப்
பயன்படுமாற்றால் பிறக்கும் புகழினும் தான் உரிமையெய்தி மேம்படுதலின்,
“அதனினும் உயர்ந்தன்று” என்றார். சிறுமை, ஈண்டு நீர் சிறிதாதல்.
உண்ணீர் மருங்கு, பலரும் நீர் குறித்துச் செல்லுதலால் வழிபலவுடையதாம்.
தாழ்ந்தஇடத்தே நீர் நிற்குமாகலின், மருங்கு தாழ்ந்த இடமாயிற்று.
கொடுப்போர் கொடாராதற்கும் கொடை மறுத்தற்கும் காரணம் புள்ளும்
பொழுதுமேயெனக் கொண்டு பழித்தொழிவன்றிப்,
பரிசிலர்