| செருப்பிடைச் சிறுபர லன்னன் கணைக்கால் அவ்வயிற் றகன்ற மார்பிற் பைங்கட் குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய்ச் செவியிறந்து தாழ்தருங் கவுளன் வில்லொ | 5 | டியார்கொலோ வளியன் றானே தேரின் | | ஊர்பெரி திகந்தன்று மிலனே யரணெனக் காடுகைக் கொண்டன்று மிலனே காலைப் புல்லா ரினநிரை செல்புற நோக்கிக் கையிற் சுட்டிப் பையென வெண்ணிச் | 10 | சிலையின் மாற்றி யோனே யவைதாம் | | மிகப்பல வாயினு மென்னா மெனைத்தும் வெண்கோ டொன்றாக் குழிசியொடு நாளுறை மத்தொலி கேளா தோனே. |
திணை: வெட்சி. துறை: உண்டாட்டு...
உரை: செருப்பிடைச் சிறுபால் அன்னன் - பகைவன் மேற்செல்லாதவாறுதுன்பம் செய்தலால் செருப்பிடையுற்ற சிறுபரற் கல்லை யொப்போன்; கணைக்கால் - திரண்ட காலையும்; அவ்வயிறு - அழகிய வயிற்றினையும்; அகன்ற மார்பின் - பரந்தமார்பினையும்; பைங்கண் - பசிய கண்ணினையும்; குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய் - குச்சுப்புல் நிரைத்தாற்போன்ற நிறம்பொருந்திய மயிரினையுடைய தாடியினையும்; செவியிறந்து தாழ்தரும் கவுளன் - செவியிறந்து முன்னே தாழ்ந்த கதுப்பனையுமுடையனாய்; வில்லொடுயார்கொலோ அளியன் - வில்லுடனே யார் தான் இவ்வளிக்கத்தக்கான் தான்; தேரின் - ஆராயின்; ஊர் பெரிது இகந்தன்றும் இலன் - ஊரைப் பெரிதும் நீங்கனதுமிலன்; அரண்எனக் காடு கைக்கொண்டன்றும் இலன் - தனக்கு அரண் எனக் கருதிக் காட்டைக் கைக்கொண்டதும் இலன்; காலை - இற்றைநாட் காலையே; புல்லார் இனநிரை செல் புறம் நோக்கி -பொருந்தாதாரது இனமாகிய நிரை போகின்ற இடத்தைப்பார்த்து; கையின் சுட்டிப் பையென எண்ணி - தன் கையாற் குறித்துமெல்ல எண்ணி; சிலையின் மாற்றியோன் - கரந்தையார் செய்யும்பூசலை மாற்றி வில்லாலே கொடு போந்தனன்; அவைதாம் மிகப்பல வாயினும் என்னாம் எனைத்தும் - அந்நிரைதாம் மிகப்பலவே யாயினும் என்ன பயன்படும் எத்தன்மைத்தும்; வெண்கோள் தோன்றாக் குழிசியொடு - பால் முதலியன பெய்யப்படாமையின் சிறிதும் வெள்ளிய முகம் தோன்றாத பானையைக் காண்டலுடனே; நாளுறை மத்தொலி கேளாதோன் - நாட்காலத்து உறை தெறிப்பக் கடையும் மத்தின் |