பக்கம் எண் :

122

     

ஒடுக்கம் காணாய் - தலைகரந்திருந்தவலிய வில்லையுடைய மறவரது
ஒடுங்கயிநிலையைக் கருதாய்; செல்லல் செல்லல் - போகாதொழி
போகாதொழி; நின் உள்ளம் சிறக்க - நினது மேற்கோள் சிறப்பதாக;
முருகு மெய்ப்பட்ட புலைத்திபோல - தெய்வம் மெய்யின்கண் ஏறிய
புலைமகளை யொப்ப; தாவுபு தெறிக்கும் ஆன்மேல் - தாவித்துள்ளும்
ஆனிரைமேல்; புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோய் - மருங்கிலே
விளங்காநின்ற ஒள்ளிய வாளினையும் வீரக் கழலினையு முடையோய்;
எ - று.


     புனைகழலோய், காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின்னுள்ளம்
சிறப்பதாக எனக் கூட்டுக. செல்லலென்றது அவரைக்கண்டு பொருது
கொன்றன்றிச் செல்லலென்பதாம்.

     விளக்கம்: வெட்சியாரை...செருப்புரிந்தன்று; “வெட்சியாரைக் கிட்டிச்
சூழ்ந்து அஞ்சத் தாக்கி யெடுப்பும்சாய்ப்புமான பூசலை மேற்கொண்டது.”
(பு. வெ. 25. உரை)பெரநிரை பெயர் தரப் பெயராது என்றதனால்
முன்பின்பெயர்தல் வருவித்து, மறவர் பிற்பெயர்தற்குக் காரணமும்
“மீட்கவருவாரைக் குறித்து” என வருவித்துரைத்தார். செல்லல்
எனவிலக்கியது,செல்வோனது உள்ளத்தின் சிறுமை கருதிக் கூறப்பட்ட
தன்றாதல் விளங்க, “சிறக்க நின் உள்ளம்” என்றார். தெய்வ மருள்கொண்டு
ஆடும் புலைத்தியை, “முருகு   மெய்ப்பட்டபுலைத்தி”   யென்றார்.  
“சிலம்பிற்   சூர் நசைந்தனையையாய்நடுங்கல் கண்டே” (குறுந். 52)
என்று பனம்பாரனாரும் கூறுதல்காண்க. கரந்திருந்த மறவர் வெட்சியார்
புனைகழலோன்,கரந்தையார் தலைவன்; மறவனுமாம். செல்லல் செல்லல்
என அடுக்கியது, அவரைக் கண்டு பொருது கொன்றன்றிச் செல்லலாகா
தென்பது வற்புறுத்தி நின்றமையின்,” செல்லலென்றது...என்பதாம்” என்று
உரைத்தார். நார்த்தாமலைப் பகுதியிலுள்ள குன்றுகளில் ஒன்றான
கோடைமலைஇவராற் பாடப்ட்டதென்றும் கொள்ளலாம்.

---
260. வடமோதங்கிழார்

     வடமோதம் என்பது ஓரூர். அது தொண்டை நாட்டிலுள்ளது. சித்தூர்
மாவட்டத்திற் சீகாளத்தி திருத்தணிகை வட்டங்களிலுள்ளமாதம் என்னும்
ஊர் பண்டைநாளில் மோதம் என இருந்துஇந்நாளில் மாதம் என அரசியல்
ஏடுகளில் வழங்குகிறது. மதுரைமாவட்டத்திலும் மோதம் என்ற பெரியதோர்
ஊரிருந்தமையின்தொண்டை நாட்டின் வடபால் இருந்த மோதம்
எனவழங்குகிறது. வடமோதங்கிழார் பாடிய பாட்டொன்று அகத்திலும்
காணப்படுகிறது. இவர் பொருள்களைக் கூர்ந்துநோக்கி, ஓவியம்
எழுதுபவர்க்குவேண்டுங் குறிப்புததருபவர்போலச் சொற்களால் ஓவியம்
செய்து காட்டும் ஒள்ளியபுலமை படைத்தவர். முருக்கம்பூவின் அரும்பு
இளமகளிரின்நிறமூட்டியஉகிரை நிகர்க்கும் என்பதும், குரவமலர்
வண்டூதுதோறும் உதிர்வது, வெள்ளி நுண்கோல் அரத்தால் அறுக்கப்
படுங்கால் உதிர்வதுபோல வுளதென்பதும், உடம்பொழிந்து உயிர் நீங்கும்
ஒருவனைத் தன் தோலையுரித்துக் கொண்டேகும்பாம்பின் செயலோடு