| உவமித்துரைப்பதும் மிக்க இன்பம் தருவனவாகும். பிற்காலத்தே சிவஞான போதமருளியமெய்கண்ட தேவரும் இடைக் காலத்தே சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்கதேவரும் உடம்பை விட்டுயிர் நீங்குதற்கிவர் காட்டிய உவமையை வியந்தெடுத்துத் தாமும் ஓதுவாராயினர்.
தலைமகளொருத்தி, தன் காதலன் பிரிந்து சென்றவன் விரைய வாராமையால் வேறுபட்டு வருந்தினாள். அவளது மெலிவுமிகுந்தமையின் அவன் வரவு இன்றியமையாதாயிற்று. அந்நிலையில்அவனை மிக நினைந்து வருந்தினள்; அவ்வருத்த முடிவில் அவனும்வந்து சேர்ந்தான். அதனை முன்னறிந்து உணர்த்த வந்ததோழி மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனமாக;நயந்தாங்கு, உள்ளிய மருங்கின் உள்ளம் போல, வந்து நின்றனரேகாதலர் (அகம். 317) என மொழிவது மிக்க இன்பம் தருகிறது.
ஒருகால் பகைவர் தன்னூர் ஆனிரைகளைக் கவர்ந்தேகியது அறிந்து பின்னே சென்று அப்பகைவரை வென்று நிரைகளை மீட்டுக்கொண்டு ஊரின்கண் உய்த்தான் ஒரு தலைமகன். அவன் நிரைமீட்குங்கால் செய்த போரில் அவன் மார்பில் பவைர் எய்த அம்புதைத்து அவன் உயிர் உடம்பைவிட்டு நீங்கும் நிலையைப் பயந்தது. ஊரருகே வந்ததும், அவன் உயிர் நீங்கிற்று; உடம்பும் கீழேவீழ்ந்தது. ஊரவர் அவற்கு நடுகல் நாட்டிப் பெயரும் பீடும்எழுதிச் சிறப்பித்தனர். அவன் உயிர் வாழ்ந்த காலத்தில் அவன்பாணர்க்கும் புலவர்க்கும் நிலனும் பொருளும் வழங்கி இசை பெற்றவன்.அவன் நடுகல்லானது அறியாத பாணனொருவன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவற்கு வழியில் தீநிமித்தங்கள் உண்டாயின. அதனால் அவன் இத்தலைவனைக்காண்டல் இயலாது போலும் எனும் கவலையால் விழுங்கப்பட்டுவாடிய முகத்தனானான். அவனை இடைவழியில் வேறொரு பாணன்கண்டு, பாண, இனி நீ தலைவன் தந்த நிலத்தை உழுதுண்டல்செய்வதோ, வேறு வேறிடஞ் சென்று இரந்துண்பதோ இவையேசெய்யத்தக்கன; தலைமகனோ நிரைமீட்டு வந்தவன் நிரையொடுவந்த உரையனாதி, உரிகளை யரவம் மான, அரிதுசெல் லுலகிற்சென்றனன் என்று சொல்லி, அவன் பெயர் கல்லில் எழுதப்பட்டுளது; சென்று கண்டு வழிபடுக எனக் கையறவுபடவுரைத்தான். இதனை நம் வடமோதங்கிழார், இந்த இனியபாட்டால் நம் நெஞ்சுருகுமாறு பாடியுள்ளார். | வளரத் தொடினும் வௌவுபு திரிந்து விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத் தளரு நெஞ்சந் தலைஇ மனையோள் உளருங் கூந்த னோக்கிக் களர | 5 | கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் | | பசிபடு மருங்குலை கசிபுகை தொழா அக் காணலென் கொல்லென வினவினை வரூஉம் பாண கேண்மதி யாணரது நிலையே புரவுத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந் | 10 | தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டும் | | கையுள போலுங் கடிதண் மையவே |
|