| | முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர் நெடுநிரை தழீஇய மீளி யாளர் விடுகணை நீத்தந் துடிபுணை யாக |
| 15 | வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து |
| | வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையேயிற் றுய்ந்த மதியின் மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான் நிரையொடு வந்த வுரைய னாகி |
| 20 | உரிகளை யரவ மானத் தானே |
| | அரிதுசெல் லுலகிற் சென்றன னுடம்பே கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கிய விலக்கம் போல அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே |
| 25 | உயரிசை வெறுப்பத் தோன்றிய பெயரே |
| | மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப் படஞ்செய் பந்தர்க் கன்மிசை யதுவே. |