| அவனோடு கூடி இன் புற்றிருந்தவிடத்து அவனையின்றி உயிர் வாழ்தற்பொருட்டு இரக்கக்கடவோமென்றெழுந்திருந்து வருத்தம் கொள்வாயாயினும்; இரண்டும் கையுள போலும் - இரண்டும் நினது கையகத்துள்ளன்; கடிது அண்மைய முன்னூர்ப் பூசலில் தோன்றி - மிக்கஅணுமையையுடையர் ஊர் முன்னாகச் செய்யப்பட்ட பூசலின்கண் தோன்றி; தன்னூர் நெடுநிரை தழீ இய மீளியாளர் தன்னுடைய ஊரின்கண் மிக்க நிரையைக் கொண்ட மறத்தினையுடைய வீரர்; விடுகணை நீத்தம் துடி புணையாகவென்றி தந்து - எய்யப்பட்ட அம்பு வெள்ளத்தைத் தன் துடியேபுணையாகக் கடந்து; கொன்று - பகைவரைக் கொன்று; கோள் விடுத்து- அவர் கொண்ட நிரையை மீட்டு; வையகம்புலம்ப - உலகம் தனிப்ப; வளைஇய பாம்பின் வையெயிற்று உய்ந்தமதியின் - சூழ்ந்துகொண்ட பாம்பினது கூரிய பல்லினின்று பிழைத்துப்போந்த திங்களைப் போல; மறவர் கையகத் துய்ந்தகன்று டைப் பல்லான் நிரையொடு வந்த - மறவருடைய கையினின்றும் பிழைத்துப்போந்த கன்றையுடைய பலவாகியஆனிரையுடனே வந்த; உரையனாகி - சொல்லையுடையனாய்; உரிகளை அரவம்மான - தோலுரித்த பாம்பு போல; தானேஅரிது செல்லுலகில் சென்றனன் - தான் ஒருவனுமேயாகஅரிதாகச் செல்லப்படும் தேவருகத்தின்கட் போயினான்; உடம்பு - அவனது உடம்ப; கானச் சிற்றியாற்று அருங்கரை - காட்டுட் சிற்றியாற்றினது அரிய கரையிடத்து; காலுற்றுக்கம்பமொடு சிற்றியாற்றினது அரிது கரையிடத்து; காலுற்றுக்கம்பமொடு துலங்கிய இலக்கம் போல - காலுற நின்று நடுக்கத்தோடு சாய்ந்த இலக்கத்தை யொப்ப; அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்று - அமபாற்சலித்து அவ்விடத்து வீழ்ந்தது; உயர்இசை வெறுப்பத் தோன்றியோன் பெயர் - உயர்ந்த கீர்த்தி மிகவும் தோன்றிய மறவன் பெயர்; மடஞ்சால் மஞ்ஞை யணிமயிர்சூட்டி - மென்மை யமைந்த மயிலினது அழகிய மயிராகிய பீலியைச்சூட்ட; பிறர் இடம் கொள்ளாச் சிறுவழி - பிறர்இடங்கொள்ளப்படாத சிறிய விடத்து; படஞ்செய் பந்தர்க்கல்மிசையது - புடைவையாற் செய்யப்பட்ட பந்தர்க்கீழ் நட்டகல்மேலது; எ - று.
சூட்டியென்பது சூட்டவெனத் திரிக்கப்ட்டது; சூட்டப்பட் டெனினுமமையும். மனையோள் கூந்தனோக்கி என்பதற்குப் பாண, என்மனைவியது சரியும் மயிரை நோக்கி யெனவும், புரவுத் தொடுத்தென்பதற்கு அன்று உம்மைப் புரந்த பரிசபை்பாடியெனவும் உரைப்பாருமுளர்.
விளக்கம்: உரையில் ஒரு மனைவி யென்றதில், மனைவி, மனைக்கு உரியவளாகிய ஒருத்தி யென்பதுபட நின்றது. வழிச்செல்வோர் எதிரே, விரித்த தலைமயிருடன் ஒருத்தி முற்படவரின், அதனைத்தீநிமித்தமாகக் கருதுவது இயல்பு. |