| மேம்பட்டுவாழும் வளமுடையதாம், என்று இப்பாட்டினைப் பாடுகின்றார். | பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண் இரும்பறை யிரவல சேறி யாயின் தொழாதனை கழித லோம்புமதி வழாது வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே | 5 | பல்லாத் திறணிரை பெயர்தரப் பெயர்தந்து | | கல்லா விளையர் நீங்க நீங்கான் வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக் கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே |
திணை: கரந்தை. துறை: கையறுநிலை...
உரை: பெருங்களிற்று அடியின் தோன்றும் - பெரிய களிற்றின் அடிபோலத் தோன்றும்; ஒருகண் இரும்பறை இரவல - ஒரு கண்ணினை யுடையதாகிய பெரிய பறையினையுடைய இரவலனே; சேறியாயின் - நீ போகின்றாயாயின்;தொழாதனை கழிதல் ஓம்புமதி-தொழாயாய்ப் போதலை நீ பரிகரிப்பாயாக; வழாது வண்டு மேம்படுஉம் இவ் வறநிலை யாறு - தவறாதே தொழவே இடைவிடாது வண்டுகள் மேம்பட்டு வாழும் இக்கொடிய வழி; பல்லாத் திரள் நிரை மீண்டு தன்னோடு போதரப் பேர்ந்து; கல்லா இளையர் நீங்க இயல்பாகிய போர்த் தொழிலையுடைய வீரர் இரிந்தோட; நீங்கான் - தான் போகானாய்; வில்லுமிழ் கடுங்கணை மூழ்க - வில்லுமிழப்பட்ட விரைந்த அம்பு குளிப்பு; கொல் புனல் சிறையின் கரையைக் கொல்லும் புனலின்கண் அணை போல; விலங்கியோன் கல் - எதிர்நின்று விலக்கியவனது கல்லை; எ - று.
புனற் சிறையில் விலங்கியோன் கல்லைத்தொழாதனை கழிதலை. யோம்பு; தொழவே இவ்வறநிலை யாறு வண்டு மேம்படுமெனக் கூட்டுக. தொழுது போகவே, கொடுங்கானம் மழை பெய்தலாற் குளிருமென்பான், காரியமாகிய வண்டு மேம்படுதலைக் கூறினான். வண்டென்பது மறவருள் ஒரு சாதியென்பாருமுளர். ஆறு வண்டு மேம்படுமென இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேலேறி நின்றது.
விளக்கம்: கிணைப்பறைக்குக் கிற்றின் அடியை யுவமித்தல். மரபு; பிறரும், கடாஅ யானைக் கால்வழி யன்னவென், தடாரித் தெண் கண் (புறம்.368) என்பது காண்க. தொழுது செல்கவென்னாது தொழாது செல்லுதலை ஒழிக என்றது. தொழுதாற் பிறக்கும் பயனை யறிதற்கு நினைவுறுத்தியவாறு. இவ்வறநிலை யாறு எனச் சுட்டியது, வறங்கூர்ந்து பசுமையற்ற வழியை யுணர்த்திற்று. போர்த் தொழிலையன்றி வேறெத் தொழிலும் பயிலாதவரென்றதற்குக் கல்லா விளையர் என்றார். கரையைக் கல்லி அணையை உடைத்துக் கொண்டுபோகும்பெரு வெள்ளம் என்பது போதர, கொல்புனல் சிறையின் விலங்கியோன் எனல் வேண்டிற்று. |