பக்கம் எண் :

137

     

என் அறிவும் தடுமாற்றம் அடைகிறது; அதனால் என் வறுமையைத்
தீர்ப்பாயாக” என்று வேண்டினார். உடனே அவனும் அவர் வேண்டும்
பரிசிலை நிரம்ப நல்கிச் சிறப்பித்தான்.

 பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
கயங்களி முளியுங் கோடை யாயினும்
புழற்கா லாம்ப லகலடை நீழற்
கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக வேற்றை
5நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம்
 நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
வான்றோய் நீள்குடை வயமான் சென்னி
சான்றோ ரிருந்த வவையத் துற்றோன்
ஆசா கென்னும் பூசல் போல
10வல்லே களைமதி யத்தை யுள்ளிய
 விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புண ருடம்பிற் றோன்றியென்
அறிவுகெட நின்ற நல்கூர் மையே.

   திணை: பாடாண்டிணை; துறை: பரிசில் கடாநிலை. சோழன்
உருவப் பஃறேர் இளஞ்சேட்சென்னியைப் பெருங்குன்றூர்கிழார்
பாடியது.

     உரை: பயங்கெழு மாமழை பெய்யாது மாறி - பயன் பொருந்திய
பெரிய முகில் பெய்யா தொழிதலால்; கயம் களி முளியும் கோடை
யாயினும் - நீர்நிலைகள் களியாய் முளியும் கோடைக்காலமாயினும்;
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல் - துணைபொருந்தி தாளையுடைய
ஆம்பலினது அகலிய இலையின் நீழற்கண்; கதிர்க்கோட்டு நந்தின் சுரிமுக
ஏற்றை -கதிர்போலும் கோட்டையுடைய நத்தையினது சுரிமுகத்தையுடைய
ஏற்றை; நாகிள வளையொடு பகல் மணம் புகூஉம் - நாகாகிய இளைய
சங்குடனே பகற்காலத்தே மணங் கூடும்; நீர் திகழ் கழனி நாடு கெழு
பெருவிறல் - நீர் விளங்கும் வயலையுடைத்தாகிய நாட்டையுடைய
பெரியவெற்றியையுடையோய்; வான் தோய் நீள்குடைவயமான் சென்னி -
ஆகாயத்தைப் பொருந்தும் நெடிய குடையினையும் வலிய
குதிரையினையுமுடைய சென்னி; சான்றோர் இருந்த அவையத்து
உற்றோன் - அறிவான் அமைந்தோர் தொக்கிருந்த அவையின்கண்
சென்று பொருந்தினானொருவன்; ஆசா கென்னும் பூசல் போலயானுற்ற
துன்பத்திற்குத் துணையாய் எனக்கு நீர் பற்றாக வேண்டும் என்னும்
ஆரவாரத்தை அவர் விரையத் தீர்க்குமாறு போல; வல்லே களைமதி
- விரையத் தீர்ப்பாயாக; உள்ளிய விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா
வாழ்க்கை - என்னைக் கருதி