பக்கம் எண் :

139

     

வினையாகவும் கொண்டு, விருந்தினரே வறுமை நிலவுவது கண்டு நீங்குவர்
என்றுரைப்பது முண்டென்பார், “விருந்து கண்டொளிக்கும்...என்று
உரைப்பாருமுளர்” என்றார்.

     267 ... ... ... ...
     268 ... ... ... ...

---

269. ஒளவையார்

     ஒருகால் ஒரு தலைவன் தன் பகைவர்மேல் வெட்சிப் போர் செய்ய
நினைந்து படை திரட்டினான். வீரர் ஒருங்கு கூடினர். நிரை கவர்தற்குப்
புறப்படுமுன் உண்டாட்டு நிகழ்ந்தது. அக்காலை ஆங்குப் புலியினது
கண்போல வெவ்விய கள்ளுணவு யாவர்க்கும் தரப்பட்டது. மறவர்
எல்லோரும்அவ்விடத்தேயிருந்து அதனை ஒரு முறைக்கு இருமுறை யுண்டு
மகிழ்ந்து களியாடடயந்தனர். நிரைகோட்குப் புறப்படச் சிறிது பொழுதிற்கு
முன்பு துடி கொட்டுவோன் வந்து துடியைக் கொட்டிப் புறப்பாட்டிற்
குரியராமாறு தெரிவித்தான். யாவர்க்கும் பிழிந்தெடுத்த தேறலாகிய உணவு
வழங்கினர். அவருள் தானைத் தலைவன்பால் சென்று அதனைக்
கொள்ளுமாறு பிழி வழங்குவோர் வேண்டினர்; அவன் அதனை யேலாது
தனக்குரிய வாளைக் கொணர்ந்து தருமாறு பணித்தான் என்று
அக்கூட்டத்திற் கூடியிருந்த சான்றோர் பேசிக்கொண்டனர். வெட்சிப்
போர்க்குச் சென்ற மறவர் வெற்றியொடு திரும்பினர். அவர்கட்கு
மறுபடியும் உண்டாட்டு நிகழ்ந்தது. அப்போது அவர் அவனது மற
மாண்பை எடுத்தோதிப் பாராட்டுவாராய். சான்றோருடன் இருந்த
ஒளவையார், “நிரை கோட்குப் புறப்படும் பணியைத் துடியோன் வந்து
தெரிவித்தானாக, பிழி வழங்குவோர் வந்து பிழி மகிழாகிய தேறலை
யுண்ணுமாறு வேண்டினர்; நீ இது தாவெனக் கொள்ளாது வாள்தரக்
கொண்டனை; இப்போது நிகழ்ந்த வெட்சிப் போரில் கரந்தையாரைக்
கொன்று அவருடைய ஆனிரைகளைத் தழீஇப் போந்தபோது
அவரது மாறுபாட்டினைக் கெடுத்த இவ்வாளைத் தானே அப்போது
தரக் கொண்டனை; நின் வென்றி மேம்படுவதாக” என இந்த அழகிய
பாட்டைப் பாடினர்.

 குயில்வா யன்ன கூர்முகை யதிரல்
பயிலா தல்கிய பல்காழ் மாலை
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்
புத்தகற் கொண்ட புலிக்கண் வெப்பர்
5ஒன்றிரு முறையிருந் துண்ட பின்றை
 உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றது
கொள்ளா யென்ப கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய வறிந்துமாறு செருவிற்
10பல்லா னினநிரை தழீஇய வில்லோர்க்
 கொடுஞ்சிரைக் குரூஉப்பருந் தார்ப்பத்
தடிந்துமாறு பெயர்த்தவிக் கருங்கை வாளே.