| | தொறுவாய்ப் பட்ட தெரிய லூன்செத்துப் பருந்துகொண் டுகப்பயாங் கண்டனம் மறம்புகன் மைந்தன் மலைந்த மாறே. |
திணை: நொச்சி; துறை: செருவிடை வீழ்தல். வெறிபாடிய காமக் காணியர் பாடியது.
உரை: நீரறவு அறியா நிலமுதல் கலந்த - நீர் தொலைவறியாத நிலமாகிய முதலொடு ஒன்றி நிற்கும்; கருங்குரல் நொச்சி கண்ணார் குரூஉத் தழை - கரிய கொத்துக்களையுடைய நொச்சியினது கண்ணுக்கு நிறைந்த அழகிய நிறமுடைய தழை; மெல்லிழை மகளிர் ஐது அகல் அல்குல் தொடலையாகவும் கண்டனம் - மெல்லிய இழைகளையணிந்த இளமகளிருடைய அழகியதாக அகன்ற அல்குலிடத்தே தழையுடைாக அணியப்படவும் கண்டேம் முன்பு; இனி - இப்பொழுது; வெருவரு குருதியொடு மயங்கி - அச்சம் தருகின்ற குருதியில் கலந்து; உருவு கரந்து - உருமாறி; ஒறுவாய்ப்ட்ட தெரியல் - துணிபட்டுக்கிடந்த நொச்சி மாலையை; ஊன் செத்து - ஊனென்று கருதி; பருந்து கொண்டு உகப்ப - பருந்து கவர்ந்து உயரத்திற் கொண்டு போகவும்; யாம் கண்டனம் யாம் கண்டேம்; மறம் புகல் மைந்தன் மலைந்த மாறு - மறத்தை விரும்பும் இளையோன் அணிந் திருந்ததனால்; எ - று.
நொச்சி முதலிய கருப்பொருட்கு நிலம் முதலாதலின், நிலமுதல் என்றார். நிலமுதல் கலந்த நொச்சி யென்றதற்கு நிலத்தின்கண் நின்ற அடிமரத்தில் தழைத்த நொச்சி யென்றுரைப்பினுமமையும். இளைய மகளிர் அணியும் தழையில் நொச்சியும் ஒன்று; ஐதக லல்குல் தழை யணிக்கூட்டும் கூழை நொச்சி (அகம். 275) என்று பிறரும் கூறுதல் காண்க. ஒறுவாய்ப்பட்ட தெரியல் - ஒறுக்கும் வாள்வாய்ப்பட்டுத் துணிபட்டமாலை. மறவன் செருவில் வாளால் வெட்டுண்டு வீழ்ந்தமை, அவன் அணிந்திருந்த தெரியல் மேல் வைத்தோதியவாறு. நொச்சிக் குரூஉத் தழை, முன்பு, தொடலை யாகவும் கண்டனம்; இனி, மைந்தன் மலைந்தமாறு, பருந்து கொண்டு கப்பவும், யாம் கண்டனம் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: செருவிடை வீழ்தலாவது ஆழ்ந்துபடு கிடங்கோடரு மிளை காத்து, வீழ்ந்த வேலோர் விறல்மிகுத் தன்று (பு.வெ.மா. 514) என்பது. தொடலை, தொடுக்கப்படுவது; தழையும் மாலை போலத் தொடுக்கப்படுவது பற்றித் தொடலை யெனப்பட்டது. நொச்சித்தழை காண்டற்கு நிறைந்த அழகுடையதென்பார், கண்ணார் குரூஉத்தழை யென்று சிறப்பித்தார்; ஆகவே, அதன் அழகு தழையிடைத் தொடுக்கப்படும் தொழிற் பாட்டால் மேம்படுமாறு பெற்றாம்; கண்ணார் கண்ணி (பொருந. 148) என்பது காண்க. மெல்லிழை மகளிர் என்றவிடத்து மென்மையை மகளிர்க் கேற்றுக. மயங்குதல், கலத்தல். குருதி காண்பார்க்கு அச்சமுண்டாதல்பற்றி வெருவரு குருதி யெனப்பட்டது. உருவு கரத்தல், குருதி படிந்து நிறம் |