வேறுபட்டுத் தசைத் துண்டம் போறல். நிறம் பெயர் கண்ணிப் பருந்தூறளப்ப (பதிற். 51) எனப்பிறரும் கூறுவது ஈண்டு நோக்கத்தக்கது. உகப்பு, உயர்தல்; உகப்பே யுயர்தல் (தொல்.உரி. 8) புகலுதல், விரும்புதல். குடையும் வாளும்என்று தொடங்கும் புறத்திணைச் சூத்திரத்து(11)அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்தநொச்சி யென்றதற்கு இளம்பூரணர் இப்பாட்டினை யெடுத்துக் காட்டுவர். நிலமும் காலமும் முதற்பொருள் எனவும், நிலத்தில் உள்ள உயிருள்ளனவும் இல்லனவுமாகிய பொருள் கருப்பொருளெனவும் வழங்கும். இனியென்றதற்கேற்ப, முன்பு என்பது வருவிக்கப்பட்டது. முன்பு தொடலையாகவும் கண்டனமென்பதனால், பருந்து கொண்டு உகப்பவும் என உம்மை விரித்துக் கூறப்பட்டது. பருந்து ஊன் எனக் கருதுதற்கேது கூறுவார், குருதி மயங்கி உருவுகரந்து என்றும், நொச்சி அவ்வாறாதற் கேது,மைந்தன் மலைந்த மாறு என்றும் கூறினார்.
--- 272. மோசி சாத்தனார்
மோசி யென்பது பாண்டிநாட்டில் உள்ளதோர் ஊர். இஃது இப்போது மோசிகுடி யென வழங்குகிறது. இவ்வூர், சான்றோர் பலர் பிறந்த பெருமையுடையது. பகைவர் கைப்பற்றாதபடி மதிலிடத்து நொச்சி சூடிப் பொருத மறவன் ஒருவன் அப்போரில் புண்பட்டு மாண்டான். அவன் சென்னியில் சூடிக்கொண்டிருந்த நொச்சியும் அவனோடே கிடந்தது. அது கண்ட சாத்தனார்க்குக் கையறவு பெரிதாயிற்று. எதிரே இருந்த ஒரு நொச்சி மரத்தையும் பார்த்தார். பார்த்த அளவில் அவர் உள்ளத்தில் கருக்கொண்டெழுந்தது இப்பாட்டு.
| மணிதுணர்ந் தன்ன மாக்குர னொச்சி போதுவிரி பன்மர னுள்ளுஞ் சிறந்த காத னன்மர நீமற் றசினே கடியுடை வியனகர்க் காண்வரப் பொலிந்த | 5 | தொடியுடை மகளி ரல்குலுங் கிடத்தி | | காப்புடைப் புரிசை புக்குமா றழித்தலின் ஊர்ப்புறங் கொடாஅ நெடுந்தகை பீடுகெழு சென்னிக் கிழமையு நினதே. |
திணையும் துறையு மவை. மோசிசாத்தனார் பாடியது.
உரை: மணி துணர்ந்தன்ன மாக்குரல் நொச்சி - மணிகள் கொத்துக் கொத்தாய் அமைந்தாற்போன்ற கரிய கொத்துக்களையுடைய நொச்சியே; போது விரி பன்மரனுள்ளும் - பூக்கள் மலர்ந்த பலவாகிய மரங்களுள் வைத்து; சிறந்த காதல் நன்மரம் நீ - மிக்க அன்பு செய்தற்குரிய மரம் நீயாவாய்; கடியுடை வியல் நகர் காண் வரப் பொலிந்த - காவலையுடைய அகன்ற நகரின்கண் அழகுவர விளங்கிய; தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி - தொடியையுடைய இளமகளிர் அல்குலிடத்தே |