| 10 | இவணுறை வாழ்க்கையோ வரிதே யானும் | | மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத் தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரிற் சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும் கழிகல மகளிர் போல | 15 | வழிநினைந் திருத்த லதனினு மரிதே. |
திணை: பொதுவியல். துறை: ஆனந்தப்பையுள். மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
உரை: என்னை மார்பில் புண்ணும் வெய்ய - என் தலைவனுடைய மார்பிலுண்டாகிய புண்களும் பெரியவாயுள்ளன. நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும் - நண்பகற்காலத்தே வந்து வண்டுகளும் மொய்த்து ஒலிக்கின்றன;நெடுநகர் வரைப்பில் விளக்கும் நில்லா நெடிய மனையின்கண் ஏற்றிவைத்த விளக்குகளும் நின்றெரியாமல் அவிந்து விடுகின்றன; துஞ்சாக்கண் துயிலும் வேட்கும் - உறங்குதல் ஒழிந்த என் கண்களும் உறக்கத்தை விரும்புகின்றன; அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும் - அச்சத்தைத்தரும் கூகையும் தன் குழறு குரலெடுத்து ஒலியா நிற்கிறது; நெல் நீர் எறிந்து விரிச்சியோர்க்கும் - நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும்; செம்முது பெண்டின் சொல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும்; செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா -செம்மையுடைய முதுபெண்டானவள் சொல்லிய சொற்களும் குறையுடையவாயுள்ளன; துடிய - துடி கொட்டுபவனே; பாண - பாண் மகனே; பாடுவல் விறலி - பாடல்வல்ல விறலியே; என்னாகுவிர் கொல் -எங்ஙனமாவீர்களோ; அளியீர் - இரங்கத்தக்கீர்; நுமக்கும் இவணுறை வாழ்க்கையரிது - இதுகாறும் இருந்தாற்போல இவ்விடத்தே இருந்து வாழலாமென்பது உங்கட்கும் இனி அரிதாம்; மண்ணுறு மழித்தலை தெண்ணீர் வார - கழுவுகின்ற மொட்டையான தலையினின்றும் தெளிந்த நீர் ஒழுக; தொன்று உடுத்த அம்பகைத் தெரியல் - முன்பு இளமைக் காலத்தில் உடுத்த அழகிய பகைத்தழையா யுதவிய; சிறு வெள்ளாம்பல் அல்லியுண்ணும் - சிறிய வெள்ளிய ஆம்பலிடத் துண்டாகும் அல்லியரிசியை யுண்ணும்; கழிகல மகளிர்போல - கழித்த அணிகலங்களையுடைய கைம்பெண்டிர்போல; வழி நினைந்திருத்தல் அதனினும் அரிது - தலைவன் இறந்த வழிப் பின்னே வாழு் திறம் நினைந்து யானும் இங்கே உயிர் வாழ்ந்திருப்பது அதனினும் அரிதாம்; எ - று.
உயிர்க்கிறுதி பயவா தொழியாத புண்களாதலால் வெய்ய என்றாள். தும்பி முதலியவற்றின் செயல் கூறியது தலைவன் சாக்காட்டினை முன்னறிவிக்கும் தீக்குறி. இதுகாறும் தலைவன் தாணிலிழல் வாழ்ந்தவராதலால், |