| விளக்கம்:இம் மூதின் முல்லைத் துறையைப் புறப்பொருள் வெண்பா மாலையுடையார் சிருங்காரநிலை (7 : 24) என்பர். அஃதாவது, பகை புகழக்கிடந்தானை, மூகை முறுவலார் முயக்கமர்ந்தன்று என வரும். முரசுக்குத் தோல் மயிர் நீக்காது போர்க்கப்படுமென்பதை கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த, மாக்கண் முரசம் (மதுரை. 732-3) என்று பிறரும் கூறுவர். தோலுக்குரிய ஏறு மறஞ் சிறந்ததாக இருக்கவேண்டு மென்பது மரபு; அதனால் சான்றோர் ஓடா நல்லேற்றுரிவை யென்றும், கொல்லேற்றுப் பைந்தோல் என்றும் தெரிந்தோதினர்; ஈண்டும் ஆசிரியர் ஏற்றின் பீடு காணும் திறம் எடுத்தோதுவாராய் அண்ணல் ஏறு இரண்டு உடன்மடுத்து, வென்றதன் பச்சைஎன்றார். ஞாட்பு,போர்க்களம்.மார்பிற்பட்ட புண், குருதி மிகக் கான்று பருந்தினம் படிந்துண்ணும் பெரு நிலையாயிற் றென்பார்,முயக்கிடையீயாது மொய்த்தனஎன்றார்.அந்நிலை கண்டார்க்கு அச்சம் பயக்கும் இயல்பிற்றாக, அவன் மனையோள் அப் புண்ணால் உண்டாகி நிலை பெறும் புகழ் கருதி யெழுந்த உவகை பெரிதுற்று, பருந்தினம் இடந்தராது மொய்ப்பவும், சிறிதும் அஞ்சாது அவனைத் தழீஇ மகிழ்ந்தாள் என்பது எச்சவகையாற். கொள்ளப்படும். இப் பாட்டு இடையே சிதைந்துளது. 289. கழாத்தலையார்
ஒருகால் ஒரு வேந்தன் வெட்சிப்போர் தொடுக்கவேண்டிப் போர்ப் பறை யறைவித்தான். நாட்டிலுள்ள வீரர் பலரும் திரண்டனர். வேந்தன் அவர்களோடிருந்து விருந்துண்டான். அப்போது வீரரனைவருக்கும் கள் வழங்கப்பட்டது. அந்நிலையில், அவன் மறக்குடியில் தோன்றி மறச் செயலால் மாண்புற்ற மறவரைத் தேர்ந்து அவர் வரிசைக் கேற்ப முகமன் கூறிச் சிறப்புச் செய்தற்குரியன். அவ்விடத்தே சான்றோர் பலரும் கூடியிருப்பர். அதனால் சான்றோராகிய கழாத்தலைாரும் அங்கே வந்திருந்தனர். வரிசையால் உயர்ந்த முதுகுடி மறச் சான்றோர் ஒருவரைச் சிறப்புற நோக்கி அவர்க்குக் கள் வழங்குமாறு வேந்தன் பணியாளரை யேவிச் சிறப்பித்தான். அதனை வியந்து நோக்கின பாணனை அச் சான்றோர் அழைத்து, பாணனே! இவ்வாறு வேந்தன் செய்யும் சிறப்பை வியத்தலை யொழி; பாசறைக் கண்ணே, இனி நிகழ்தற்குரிய போர்க்குரிய பூவைப் பெறுமாறு புலையன் தண்ணுமை யறைகின்றான்; அதனைக் கேட்பாயாக எனப் பேச்சு நிகழ்த்தலானார். கழாத்தலையார் வேந்தனது தேர்ச்சித் திறனையும் முதுகுடிச் சான்றோரது சால்பினையும் எண்ணியெண்ணி இன்புற்றார். அந்த இன்பப் பயனாக வந்தது இப் பாட்டு.
| ஈரச் செவ்வி யுதவின வாயினும் பல்லெருத் துள்ளு நல்லெருது நோக்கி வீறுவீ றாயு முழவன் போலப் பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய | 5 | மூதி லாள ருள்ளுங் காதலின் | | தனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே |
|