| | கேட்டியோ வாழி பாண பாசறைப் பூக்கோ ளின்றேன் றறையும் | 10 | மடிவாய்த் தண்ணுமை யிழிசினன் குரலே. | | ..............கழாத்தலையார் பாடியது. |
உரை: ஈரச் செவ்வி உதவினவாயினும் - ஈரமாகிய பருவம் கழிவதன்முன் உழுதற்கு உதவிசெய்தனவெனினும்; பல்லெருத்துள்ளும் நல்லெருது நோக்கி - பலவாகிய எருதுகளுள்ளும் நல்ல எருதுகளையே தேர்ந்து கொள்வானாய்; வீறு வீறாயும் உழவன் போல - வேறு வேறாக வைத்து ஆராய்ந்து தேரும் உழவனைப்போல; பீடு பெறு தொல் குடிப்பாடு பல தாங்கிய மூதிலாளருள்ளும் - பெருமை பெற்ற பழைமையான குடியில் பிறந்தாரிடத்து வழிவழிடிப்பட்டுவரும் நற்பண்புகளனைத்தையும் சோர்வுபடாது காத்துவரும் முதுகுடி மறவருள்ளும்; காதலின் - தன்பாலுள்ள அன்பால்; தனக்கு முகந்தேந்திய பசும்பொன் மண்டை - தனக்காக முகந்தெடுத்துத் தந்த பசும் பொன்னாலாகிய மண்டையிலுள்ள கள்ளை; இவற்கு ஈக என்னுமது - தன்னருகேயுள்ள இவனைக் காட்டி இவ் வீரனுக்கு நல்குவாயாக வெனச் சொல்லிச் செய்யும் அச் சிறப்பை; அன்றி சின்- மனங்கொண்டு வியத்தலை யொழி; பாண-பாணனே; பாசறை - பாசறையிடத்தே; பூக்கோள் இன்று என்று அறையும் - போர்க்குரிய மறவர்க்குப் போர்ப்பூவைத் தரும் பொழுது இப்போழுது என்று தெரிவியாநிற்கும்; இழிசினன் மடிவாய்த் தண்ணுமை குரல் கேட்டி - புலையன் இசைக்கும் தோலை மடித்துப் போர்த்த வாயையுடைய தண்ணுமையின் ஓசையைக் கேட்பாயாக; எ - று.
நல்லெருது ஆயும் உழவன் போல வேந்தன் இவனை ஆய்ந்து தேர்ந்து தனக்கு முகந்தேந்திய மண்டையை இவற்கீக என்னுமது அன்றிசின்;பாண, தண்ணுமைக் குரலைக் கேட்டி என வினைமுடிவு செய்க.அவனைத் தேர்ந்துகொண்டிதற்குக் காரணம் கூறுவார், காதலின் என்றும், சிறந்தார்க்கன்றிப் பிறர்க்குக் கொடுக்கப்படாதென்றற்குப் பசும்பொன் மண்டை என்றும் கூறினார். அதுவும் என்புழி உம்மை, சிறப்பு. அன்றுதல், மறுத்தல்;அன்றி நின்ற அவுணர் (ஞானசம். 29, 7) என்று சான்றோர் வழங்குதல் காண்க. சின்: முன்னிலையசை. தன்னை வற்புறுத்தாமை வேண்டிப் பாணனை வேறுபட அழைத்துப் பூக்கோளேய தண்ணுமைக் குரலைக் கேட்பித்தான் என அறிக. கள்ளினும் பூக்கோளைச் சிறப்புற நோக்குதலும், தன் முன்னே தான் பெறும் சிறப்புக்கு நாணுதலும், தொல் குடிப்பாடு.
விளக்கம்: உழவுவினை வென்றியுற முடிதற்கு உழவன் நல்லெருது தேர்ந்து கோடல்போல, வேந்தனும் வினைக்குரியாரை ஆராய்ந்து தேர்ந்துகோடல் இன்றியமையாதாகலின், வீறு வீறாயும் உழவன் போல என்றார்; அரசன் வினைக்குரியாரைத் தேர்ந்துகொள்ளும் முறையைத் திருவள்ளுவர், |