பக்கம் எண் :

180

     

அறம்,  பொருள்,  இன்பம்,  உயிரச்சம்  என்ற  நால்வகையால்  தேர்ந்து
வினைசெய்க  என்பர்.  பீடு  பெறு  தொல்   குடிப் பாடுபல  தாங்கிய
மூதிலாளரைப் பிறர், “பிறப்பும் பெருமையுஞ்  சிறப்புஞ்  செய்கையயும்,
அரசறி பெயரும் உரைசெயலாண்மையும், உடையோராகிய படைகோண்
மாக்கள்” (புறத். 1354) என்பர். தனக்கு என்றது வேந்தனைக் குறித்து 
நின்றது. பசும் பொன் வள்ளத்தை மண்டை யென்றான், பாணனொடு
சொல்லாடுதலின். பாணற்குக் கள்ளுண்ணும் கலன் மண்டையாகும்.
பசும்பொன் வள்ளத்திற் பெய்து தரப்படும் சிறப்பிற்றாயினும், அதனைப்
பொருளாகக் கொள்ளாது அதனைக் தருதற்கேதுவாயிருக்கும் வேந்தன்
மனத்து அன்பினையே பொருளாகக் கருதும் சான்றோரது சால்பு, “இவற்கீ
கென்னு மதுவும் அன்றிசின்” என்றதனாலும், பூக்கோளேய தண்ணுமைக்
குரல் “கேட்டியோ” என்றதனாலும் விளங்கித் தோன்றுகிறது. இளம்பூரணர்
“மறங்கடைக் கூட்டிய துடிநிலை”க்கு (புறத். சூ. 4) இதனைக் காட்டுவர்.

290. ஒளவையார்

     ஒரு வேந்தன் வேறொரு வேந்தனொடு பகைகொண்டு வெட்சி
மலைந்து அவன் நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்துகொண்டான்.
அதனையறிந்த அவன் கரந்தை சூடித் தன்னாட்டு ஆனிரைகளை மீட்கும்
குறிப்பால் போர்க்கெழச் சமைந்தான். கரந்தைப் போரைத் தெரிவிக்கும்
போர்ப்பறை நாடு முற்றும் முழங்கிற்று. நாட்டிலுள்ள வீரர் அனைவரும்
திரண்டனர். வேந்தன் தானைத் தலைவர்களைக் கூட்டி
உண்டாட்டொன்றினை நிகழ்த்தினான். அப்போது தலைவர் பலரையும்
நேரிற் கண்டு அவரவர் நலங்களையும் தெரிந்து சிறப்புச் செய்வது
அவன் கடமையாகும். அவரவர் குடிவரவும் பண்பும் எடுத்தோதுவது
சொல் நலம் வாய்க்கப்பெற்ற சான்றோர் செயல். இத்தகைய உண்டாட்டில்
ஒளவையார் சென்றிருந்தார். தானைவீரர் குடிநிலையும் செயற்றிறமும்
எடுத்தோதும் அரும்பணியைச் சான்றறோராகிய ஒளவையார்
மேற்கொண்டார்.வீரர் ஒவ்வொருவரையும் பற்றிச் சான்றோர் எடுத்தோதக்
கேட்கும் வேந்தன் மகிழ்ந்து தகுவது கூறிப் பொன் வள்ளத்தில்
கள்ளேந்தித் தருவன்.இவ்வாறு வீரர் குடிநிலை யுரைக்கப்புக்க ஒளவையார்,
வீரனொருவன் குடிநிலையைக் கூறுவாராய் இனிய பாட்டொன்றைப்
பாடினார். அதன்கண், “வேந்தே! இக்கள்ளை முன்னர் இவர்க்குத் தந்து
பின்னர் நீ உண்பாயாக; இவன் தந்தைக்குத் தந்தை நின் தந்தை
தந்தைக்குக் கண்ணிமையாது காத்து, ஆர்செறிப்புண்டு நிற்கும்
ஆழிக்குடம்போலப் பகைவர் எறிந்தவேல் பாய்ந்து நிற்ப நின்று
மாய்ந்தான்; அவன் பெயரானாகிய இவன் கடுமழை காக்கும் பனங்குடை
போல நின்னைக் குறித்து மாற்றார் எறியவரும் வேலைத் தான் இடை
நின்றேற்றுக் காத்து நிற்பன்; இவன் வெல்போர் பல செய்து மறப்புகழ்
நிறைந்தவன்,” என்று அவன் குடிநிலையை அழகுறக் காட்டியுள்ளார்.
அப் பாட்டு இது.

 இவற்கீத் துண்மதி கள்ளே சினப்போர்
இனக்களிற் றியானை யியறேர்க் குருசில்
நுந்தை தந்தைக் கிவன்றந்தை தந்தை
எடுத்தெறி ஞாட்பி னிமையான் றச்சன்