|       | |   | தமர்பிற             ரறியா வமர்மயங் கழுவத் |  | 5 | திறையும்             பெயருந் தோற்றி நுமருள் |  |   | நாண்முறை             தபுத்தீர் வம்மி னீங்கெனப்             போர்மலைந் தொருசிறை நிற்ப யாவரும்             அரவுமிழ் மணியிற் குறுகார்             நிரைதார் மார்பினின் கேள்வனைப் பிறரே. |  
     திணை:         தும்பை; துறை: தானை மறம். பெருந்தலைச் சாத்தனார்          பாடியது.
       உரை: வெண்குடை         மதியம் மேல் நிலாத் திகழ்தர -வெண்         குடைபோலும் முழுத்திங்கள் வானத்தின்மேனின்று நிலவைப்          பொழிந்து விளங்க; கண் கூடு இறுத்த கடல்மருள் பாசறை - படை          வீரர் ஒருங்கு கூடித் தங்கியிருந்த கடல்போன்ற பாசறையின் நீங்கிச்          சென்று; குமரிப்படை தழீஇய கூற்றுவினை யாடவர் - புதமையுறச் செம்மை          செய்யப்பட்ட வேல் முதலிய படைகளைக் கைக்கொண்ட கொலைத்          தொழிலையுடைய போர்வீரர்; தமர் பியர் அறியா அமர் மயங்கு அழுவத்து         - எதிர்வோர் உறவினரென்றும் பிறரென்றும் பாராமல் கைகலந்து          செய்யும் போர்க் களத்தில்; இறையும் பெயரும் தோற்றுவித்து; நுமருள்          நாண்முறை தபுத்தீர்- நும்மில் வாழ்நாண் முறை முடிந்தவர்; வம்மின் ஈங்கு          என போர் மலைந்து ஒரு சிறை நிற்ப - வருக இவண் என்னோடு          பொருதற்கென்று சொல்லி வந்த பெருவீரர் பலரையும் வென்று ஒரு         புறத்தே நின்றானாக; அரவு உமிழ் மணியின் பிறர் யாவரும் குறுகார் -          பாம்புமிழ்ந்த மணியை எவரும் குறுகாதொழிவதுபோலப் பகைவர்         யாவரும் குறுகாராயினர்; நிரைதார் மார்பின் நின் கேள்வனை நிரையாகத்          தொடுக்கப்பட்ட மாலையையுடைய நின் கொழுநனை; எ - று.
               வெண்மதியத்தின் நிழலினும் வேந்தன் வெண்குடை         நீழல்          சிறந்ததாதலின், வெண்குடைபோலும் மதியம் எனப்பட்டது. வாய்தீட்டி          நெய்பூசப் பெற்றுச் செம்மையுற்றிருக்கும் வேலும் வாளும் பிறவுமாகிய          படை குமரிப்படை உயிரை உடம்பினின்றும் நீக்கும் தொழிலைச் செய்வது          கூற்றின் செயலாதலின், அதனைச் செய்யும் போர் வீரரைக் கூற்றுவினை          யாடவர் என்றார். சீரிய வீரருடன் நேரிய முறையில் போர் புரிவது          வீரர்க்குப் புகழும் அவரை யாளும் வேந்தர்க்குப் பெருமையும்          பயத்தலின், இறையும் பெயரும் தோற்றி யென்றார். பாசறை யென்பதில்                  ஈற்றில் நீக்கப் பொருட்டாகிய இன்னுருபு தொக்கது.
               விளக்கம்:         தானை மறமாவது, தாம் படைத்தலைக் கொள்ளாமை          ஓம்படுத்த  வுயர்பு  கூறின்று (பு. வெ. மா. 7:3)           என   வரும்.          நச்சினார்க்கினியரும், தானை யானை குதிரை யென்ற, நோனாருட்கும்          மூவகை  நிலையும்  (தொல். புறத். 17)  என்றவிடத்துத்  தானைநிலை                  யென்பதற்கு இப்பாட்டினை யெடுத்துக் காட்டுவர். உவமம் பொருளினும்   |