பக்கம் எண் :

195

     

     விளக்கம்: உண்டாட்டாவது, “தொட்டிமிழுங் கழன்மறவர் மட்டுண்டு
மகிழ்தூஉங்கின்று”   (பு. வெ. மா. 1:15)   எனவரும்.  மருத
நிலத்தூர்களின்கண்ணே மறவர் கருத்து ஒன்றி நிற்றலின், உவமையினும்,
மருதநிலத் தெருமை மருப்பே கூறப்படுவதாயிற்றெனவறிக. பயற்றின்
நெற்றுக்குஎருமை மருப்புவமம். பயற்றங் கோதுகளை அணையாகப்பரப்பி
அதன்மீது மரையான் படுத்து உறங்கும். புரவு,இறையிலி, முற்றூட்டு என்பன
பண்டை வேந்தர்  சிறப்தோர்க்கு  அளிக்கும்  நிலக்கொடை  வகை.
புரவாவது விளைநிலம்;   இதற்கு   அரசிறையுண்டேயன்றிப்  புரவுவரி
கிடையாது. இறையிலியாவது அரசிறையன்றிேனைப் புரவுவரி முதலியன
உளப்பட வழங்கும்நிலம்.  முற்றூட்டாவது, அரசிறை, புரவுவரி, பாடிகாவல்
முதலிய வரியின்றி முழுதும்  உரிமையாக  வழங்கும்  நிலம்.  பயறும்
மரையாவும் கூறவே, சீறூரென்பது முல்லை நிலத்தூராயிற்று. இறையிலி
கோயில்கட்கும், முற்றூட்டு வினை மேம்பட்ட சான்றோர்க்கும் கற்றுவல்ல
நல்லிசைச் சான்றோர்க்கும் பண்டை மன்னரால் வழங்கப் பட்டமை
இடைக்காலக் கல் வெட்டுகளால் அறியலாம்.  துறைக்கு  அணித்தாக
வளர்ந்துள்ள  சண்பங்கோரைப்புதல் “துறைநணி” யெனப்  பட்டது.
”வெறியறி சிறப்பின்” (தொல்.புறத். 5) என்ற சூத்திரத்து,  “தலைத்தா
ணெடுமொழி தன்னொடு புணர்த்தல்”  என்பதற்கு இதனை யெடுத்துக்
காட்டி, “மடல்வன் போந்தைபோல் நிற்பலென நெடுமொழிதன்னொடு
புணர்த்தவாறு காண்க” என்றும், “சீறூர் புரவாகக் கொள்ளேன் தண்ணடை
கொள்வேன் எனத் தன்னுறு தொழில் கூறினா” னென்றும் கூறுவர்
நச்சினார்க்கினியர்.

298. ஆவியார்

     ஆவியாரென்னும் இச் சான்றோர், திருவாவிநன்குடியிலிருந்து
ஆட்சிபுரிந்த வேளிர் குடியிர். “முருக னற்போர் நெடுவேளாவி” (அகம்.1)
என்றும், “முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி” (அகம்.61) என்றும்
ஆவியர் குடி முதல்வன் சான்றோரால் குறிக்கப்படுகின்றான். அவனுடைய
தலைநகர் பொதினி யெனப்படும். அதனைப் “பொன்னுடை நெடுநகர்ப்
பொதினி” (அகம். 61) என்ப; அது பிற்காலத்தே பழனியென மருவிற்று.
இந்த ஆவியர் வழியினர் பிற்காலத்தே நன்குடி வேளாளரென்றாகித் தென்
பாண்டியில் வாழ்வாராயினர்.அவருட் பலர் தொல்பெயரான ஆவியாரென்ற
பெயர் தாங்கியிருக்கின்றனர்.ஆலியாரென்றும் பாட வேறுபாடுண்டு.
அதுவே பாடமாயின் அவர் ஆலியென்னும் சோழநாட்டு ஊரினரெனக்
கோடல் வேண்டும் பல்லவர் காலத்தே திருமால் அடியாராகச்
சிறப்புற்றிருந்த திருமங்கை மன்னன் ஆலியென்னும் ஊரினராவர்;
அவரைத் திருவாலிநாடர் என்பதும் வழக்கம். இத் திருவாலி சோழ
நாட்டில் சீர்காழியிலிருந்து திருவெண் காட்டுக்குச் செல்லும் வழியில்
உளது. கரந்தை சூடிப் போர்க்குச் சென்ற மறவருள் ஒருவன் முந்துற்றுச்
செல்லும் விருப்பினனாக, போரை முன்னின்று நிகழ்த்தும் வேந்தன்
பிறனொருவனைச் செலுத்தினான். அதனால் மனவிதுப் படங்காத அவன்,
“உண்டாட்டுக் காலங்களிலெல்லாம் முன்பு வேந்தன் சிறப்புடைய
கலங்கற்கள்ளையே எமக்குத் தந்து களிப்புச் சிறப்பில்லாத தேறலைத்
தானுண்பான்; இப்பொழுது அப்பெற்றியோன் எம்பால் அன்பிலனாயினான்
தெளிவாக;