அருகிற் கண்டும் அறியார்போல் ஒழுகுவது செருக்கின்பாலதாய்ப் பரிசிலரை இகழ்ந்து மறுக்கும் குறிப்பிற்றாதலின், அதனை யெடுத்தோதி வெறுக்கின்றார். திரங்குதல், ஏக்கத்தால் உள்ளம் வெதும்பி உடல் வாடுதல் குறித்து நின்றது. நின்னைத்தவிரவேறே எம்மை ஆதரிப்பார் இல்லெனக் கருதற்க என்பார், பெரிதே யுலகம் பேணுநர் பலரே என்றார். 208. அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் நெடுமானஞ்சி தகடூரில் இருக்கையில் பெருஞ்சித்திரனார் அவனைக்காணச் சென்றார். பெருஞ்சித்திரனார்த மதுவறுமைத் துன்பத்தைப் போக்குவதொன்றே கருதித் தமதுபுலமை நலத்தைச் செலவிடுகின்றாரென்று கருதியோ, இளவெளி மான் முதலிய இளையோர் மடமைகருதாது நேர்வைத்து இழித்தமைகருதியோ தன்பால் அரசியல் அலுவல் மிகுதியாக இருந்ததனாலோ எதனாலோ அதியமான் இவரை நேரிற்கண்டு அளவளாவ இயலாதவனாயினான். அவன் இறந்த பின்னும் பெருஞ்சித்திரனார் இருந்து குமணனைப் பாடிப் பரிசில் பெற்றுள்ளாராகலின், அவனைக் காணச் சென்றபோது அவன் ஒருகால் உடல்நலங் குன்றியிருந்தும் இருக்கலாம்.ஆயினும் அக்கொடைவள்ளல் பெருஞ்சித்திரனார் வரிசை நோக்காது பரிசிலும் நல்காது விடுத்தானல்லன். தன் தகுதிக்கும் புலவரது வரிசைக்கும் ஏற்றபரி சிலைவரக் கண்டதும் அழகுறக்கொண்ட இந்த அதியமான் என்னைக்காணாது நல்கும்பரி சிலையான் ஏலேன்; குன்றுகளையும் மலைகளையும் கடந்து நெடுவழி நடந்து பரிசிலொன்றே கருதி யான் இங்கே வந்துள்ளேனென்பது இக்கொடை வள்ளல் எங்ஙணம் அறிந்தான்? வருகெனல்வேண்டும்வரிசையுடையேனாகிய என்னைக் கண்ணாற்காணாமே நல்கும் இப்பரிசிலையேற்றுக்கோடற்கு யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; என்னை விரும்பி வருகென எதிர்கொண்டு, என் புலமையளவும் கண்டு, பின் எனக்கு நல்கும் பரிசில் மிகச்சிறிதாயினும் எனக்கு அது மிக்க இன்பந் தருவதாம் என்று பாடிவிட்டார். அதியமான் மனங்கனிந்து நேரிற்கண்டு பிழை பொறுக்குமாறுவேண்டிப்பெருஞ்சித்தரனாரது லமையன்புபெற்று உடல் பூரித்தான். பெருஞ்சித்திரனார் பின்பு அவன் தந்த பரிசில் பெற்று விடைகொண்டு சென்றார்.
| குன்று மலையும் பலபின் னொழிய வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென நின்ற வென்னயந் தருளி யீதுகொண் டீங்கனஞ் செல்க தானென வென்னை | 5 | யாங்கறிந் தனனோ தாங்கருங் காவலன் | | காணா தீத்த விப்பொருட் கியானோர் வாணிகப் பரிசில் னல்லேன் பேணித் தினையனைத் தாயினு மினிதவர் துணையள வறிந்து நல்கிணர் விடினே. |
|