பக்கம் எண் :

207

     
பண்ணற்கு விரைதி நீயே நெருதை
5 எம்முற் றப்பியோன் றம்பியொ டொராங்கு
  நாளைச் செய்குவெ மைரெனக் கூறிப்
புன்வயி றருத்தலுஞ் செல்லான் பன்மான்
கடவு மென்ப பெரிதே யதுகேட்டு
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
10. இலங்கிரும் பாசறை நடுங்கின்
 றிரண்டா காதவன் கூறிய தெனவே.

     திணையும் துறையு மவை. அரிசில்கிழார் பாடியது.

     உரை: கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி - வளைத்த
குழையணிந்த தேவியர் மாலை சூட்டி மகிழ்விக்க; நடுங்கு பனிகளைஇயர்
நாரரி பருகி - நடுக்கத்தைச் செய்யும் குளிரைப் கோக்குதற்காக நாரால்
வடிக்கப்பட்ட நறவையுண்டு; வளி தொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி -
காற்றின்  கடுமையைத்   தனக்கு   நிகராகாமை   செய்யும்  வளவிய,
செலவையுடைய  குதிரையை; பண்ணற்கு விரைதி நீ - போர்க்கேற்பச்
சமைத்தற்கு விரைகின்றாய் நீ; நெருதை - நேற்று; என் முன் தப்பியோடும்;
நாளை ஒராங்கு செய்குவென் அமர் எனக் கூறி- நாளை ஒருசேரப் பொருது
அழிப்பேன் என்று வஞ்சினம் கூறி; புன் வயிறு அருத்தலும் செல்லான் -
வயிற்றுப் பசிதீரச் சிறிதுணவு தானும் உண்ணானாய்;  பன்மான்  பெரிது
கடவும் என்ப - பல குதிரைகளையும் பெரிதும் ஆராய்கின்றான் என ஒற்றர்
கூறுவர்; அது கேட்டு - அவ் வொற்றுரை கேட்டு; வலம்படு வெல்லும்
போரையுமுடைய வேந்துனுடைய; இலங்கிரும் பாசறை - விளங்குகின்ற
பெரிய பாசறையிலுள்ளார்; அவன் கூறியது இரண்டாகாதென நடுங்கின்று -
அவன் கூறிய வஞ்சினம் சொல்வேறு செயல்வேறென இரண்டாகாதென்று
நடுங்குகின்றனர்; எ - று.

     சூட்டி யென்றதனைச் சூட்டவெனத் திரிக்க. தன்னையுண்டார்க்கு
வெம்மை யுண்டுபண்ணுவதுபற்றிக் கள்ளுண்டதனை, “நடுங்குபனிகளைஇயர்
நாரரி பருகி” யென்றார்.அமர்செய்குவனென்றது, அமரில் கொல்வேனென்னும்
குறிப்பிற்று. இருவரையும்  கொன்றல்லது  உணவு   கொள்ளேனென்னும்
குறிப்பிற்று. இருவரையும் கொன்றல்லது உணவு கொள்ளேனென வஞ்சினம்
கூறினமை விளங்க ‘புன்வயிறருத்தலும் செல்லான்; என்றார். உணவினது
புன்மை வயிற்றின்  மேனின்றது. புன்மை   ஈண்டுச்   சிறுமை  மேற்று.
பகைவேந்தனை “வலம்படு  முரசின்  வெல்போர் வேந்தன்” என்றது
இகழ்ச்சிக் குறிப்பு. நீ சூட்டப்பருகி விரைதி; கடவும்