பக்கம் எண் :

23

     
10பெறாது பெயரும் புள்ளிமை போலநின்
 நசைதர வந்துநின் னிசைநுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ வாண்மேம் படுந
ஈயா யாயினு மிரங்குவே னல்லேன்
நோயிலை யாகுமதி பெரும நம்முட்
15குறுநணி காண்குவ தாக நாளும்
 நறும்ப லொலிவருங் கதுப்பிற் றேமொழித்
தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
பெருவரை யன்ன மார்பிற்
செருவஞ் சேஎய்நின் மகிழிருக் கையே.

   திணை: அது துறை: பரிசில் கடாநிலை. மூவன் பரிசில் நீட்டித்
தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.


    உரை: பொய்கை நாரை - பொய்கைக்கண் மேய்ந்த நாரை;
போர்வில் சேக்கும் - போரின்கண்ணே யுறங்கும்;நெய்தலங் கழனி
நெல்லரி தொழுவர்- நெய்தலையுடைய அழகிய வயற்கண் நெல்லை
யறுக்கும் உழவர்; கூம்புவிடுமென்பிணி அவிழ்ந்த ஆம்பல் அகல்
அடை - முகை யவிழ்கின்ற மெல்லிய இதழ்கள் நெகிழ்ந்த
ஆம்பலினது அகன்ற இலையதனாலே; அரியல் மாந்தி -மதுவை
யுண்டு; தெண்கடல் படுதிரை இன்சீர்ப்பாணி தூங்கும் - தெளிந்த
கடலினது ஒலிக்கும் திரையின் இனிய சீராகிய தாளத்தேயாடும்;
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந-மென்புலத்தூர்
களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே; பல்கனி நசைஇ- பல
பழத்தையும் நச்சி;அல்க  விசும்பு உகந்து - தாம்
வாழ்வதற்கிடமாகிய ஆகாயத்தின்கண்ணே உயரப் பறந்து;
பெருமலை விடரகம் சிலம்ப முன்னி -பெரிய மலையின்
முழைஎதிரொலி முழங்கச்சென்று; பழனுடைப் பெருமரம்
தீர்ந்தெனக் கையற்று - அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம்
பழுத்து மாறிற்றாக வருந்தி; பெறாது பெயரும் புள்ளினம்போல
-பழம் பெறாதே மீளும் புள்ளினத்தை யொப்ப; நின் நசைதர
வந்து - நினது நச்சப்படுந்தன்மை கொடுவர வந்து; நின் இசை
நுவல் பரிசிலேன் - நின் புகழைக்கூறும் பரிசிலேன் யான்;
வறுவியேன் பெயர்கோ- வறியோனய் மீளக்கடவேனோ; வாள்
மேம்படுந - வாட்போரின்கண் மேம்படுவோய்; ஈயாய் ஆயினும்
இரங்குவேன் அல்லேன் - நீ ஒன்றை ஈத்திலையாயினும் யான்
அதற்கு வருந்துவேனல்லேன், நோயிலை யாகுமதி -
அதுநிற்க நோயின்றிருப்பாயாக; பெரும் நம்முன் குறுநணி
காண்குவதாக - பெரும நம்மிடத் துளதாகிய அணிய
அணுமையைக் காண்பதாக; நாளும் - நாடோறும்; நறும்பல்
ஒலிவரும் கதுப்பின் - நறிய பலவாகிய தழைத்த மயிரையும்;
தேமொழித்தெரியிழை மகளிர் - தேன்போலும்