| சொல்லையும் ஆராய்ந்த ஆபரணத்தினையுமுடைய மகளிர்; பாணி பார்க்கும் ஒருவரினொருவர் புணர்தற்குக் காலம் பார்க்கும்; பெருவரையன்ன மார்பின்-பெரியமலைபோலும்மார்பினையுடைய;செரு வெஞ் சேஎய் - போரைவிரும்பும் சேயையொப்பாய்; நின்மகிழிருக்கை - நினது மகிழ்ச்சியையுடைய நாளோலக்கம்; எ - று.
பாணி பார்க்கும் மார்பு பாணி பார்த்தற்கு ஏதுவாகிய மார்பு. நம்முட் குறுநணி காண்குவதாக என்றது. நீ என் மாட்டுச் செய்த அன்பின்மையை அவ்விருக்கையன்றி, பிறர் அறியாதொழிவாராக வென்னும் நினைவிற்று.
பொருத,வாண்மேம்படுந, சேஎய், நின் இசை நுவல் பரிசிலேன், வறுவியேன்பெயர்கோ,ஈயாயாயினும் இரங்குவேனல்லேன்: பெரும, நோயிலையாகுமதி; நம்முட்குறுநணியை நின்னிருக்கை காண்குவதாக; பிறர் காணாதொழிகவெனக் கூட்டுக.
நோயிலையாகென்பது, நீ செய்த தீங்கால் நோயுறுவை; அஃதுறா தொழிகவென்பதாம். இனி, நின் மகிழிருக்கைக்கண் நம்முன் மிக அணித்தாகக் காணும் காட்சி உளதாகவென்றுமாம். இதனாற் காட்சி யுண்டாகாதென்பது குறிப்பு. இனி, குறுநணி காண்குவதாக என்பதற்கு நம்மிடத்து மிகவும் மனத்தாற் காணும் காட்சி உளதாகவென்பது கூடாது நீ செய்த கொடுமையான் என்னுரைப்பினு மமையும்.
விளக்கம்: பாணி, காலம்; ஈண்டுப் புணர்தற்குரிய காலத்தின் மேல் நினற்து. பார்ப்பவர் மகளிரும். பார்க்கப்படுவதுபாணியுமாகலின், அவற்றோடு மார்பு இயைதற்கு விளக்கங் கூறுவாராய், பாணி பார்க்கும் மார்பு, பாணி பார்த்தற்கேதுவாகிய மார்பு என்றார்.குறுநணி, அணிய அணுமை;அஃதாவதுமிக்க நெருக்கம்.இதுகுறிப்புமொழியாய் நெஞ்சத்தால் நெடுந்தொலையில் இயைபின்றி யிருப்பது என்பதுபட நின்றது. கொடுக்கும் வள்ளன்மை யில்லாதாரை முன்னறிந்துகொள்ளாது சென்று பரிசில்பெறப்பாடிவறுவியராய்ச்சேறல்புலவரதுபுலமைக்கு இழிவு பயக்குமாகலினாலும், புலவரை யிகழ்ந்த செல்வரை ஏனைப் புலவர் பாடாது வரைவாராதலாலும், நம்முட் குறுநணி காண்குவதாக என்பதனால் நீ என்மாட்டுச் செய்த... பிற ரறியா தொழிவாராக என்று விளக்கினார். எனவே, காட்சியோடமைந் தொழியல் வேண்டுமேயன்றிக் கண்டதனைப் பிறர்க்கு உரைத்தலுமாகாது என்பதாம். நோயிலையாகுக என்றதற்குக் கருத்து இதுவென விளக்குவாராய், நோயிலையாகென்பது... என்பதாம் என்றார். இன்றில்லையாயினும் பிறிதொருகால் நின்மகிழிருக்கைக்கண் நம்முள் மிக அணித்தாகக் காணும்காட்சியுளதாக என்ற கருத்தால் நோயிலையாகுமதி யென்று கூறற்கும் இடமுண்மையின், உளதாகுக என்றுமாம் என்றும் எனினும், உள்ளக்குறிப்பு, இதனால் காட்சியுண்டாகாதென்பது என்றும் உரைத்தார். குறுநணிக் காண்குவது ஆக என நிறுத்தி, காண்குவது மனத்தாற் காணுங்காட்சி என்றும், ஆக, உளதாக என்றும் பொருள் கொண்டு, மனத்தாற் காணும் காட்சியுளதாக என்றாரேனும் குறிப்பு, அத்தகையதொரு காட்சியுண்டாதல் கூடாது என்றும், அதற்கு ஏது அவன் செய்த கொடுமைதான் என்றும் விளக்குவார், இனி குறுநணி...உரைப்பினுமமையும்’ என்றார். --- |