பக்கம் எண் :

25

210. சேரன் குடக்கோச்சேரலிரும்பொறை
 
        குடநாட்டுக்குத் தலைவனாய்ச் சேரநாடுமுற்றும் தனக்குரித்தாகப்
பெற்றுச் சிறப்புற்றிருந்த சேரமான்களில் இக் குடக்கோச்சே ரவிரும் பொறை
சிறந்தவன். இவன் பின்னவன் குடக்கோ இளஞ்சேரலிரும் பொறை
யெனப்படுவன். இவன் பொறையர் நாட்டினனாதலால், இரும்பொறை
யெனப்பட்டான். இவன் முடியுடை வேந்தனாய்ச் செல்வக் குறைபாடிலனாய்ப்
புலவரைப் போற்றும் வேந்தர்வழித் தோன்றலாய் விளங்குவது
கேள்வியுற்றபெருங்குன்றூர்கிழார் ஒருகால் தன் மனையில் நின்று வருத்தும்
வறுமைத்துயர் போர்க்ககருதி இவனையடைந்தார். பகைவேந்தர்
மருளப்போருடற்றிக்கொற்றமெய்தும் இவனது ஆண்மையினையும், உள்ளியது
முடிக்கும் உரனுடைமையினையும் விதந்தோதித் தமது வறுமைநிலையினையும்
விளங்கவுரைத்தார். சேரமானும் அவர் விருப்பத்துக்கேற்பக்
கொடுப்போன்போலக் காட்டிக் கொடை வழங்க நீட்டித்தான். உள்ளம்
உடைந்த பெருங்குன்றூர்கிழார், “உலக மக்களைப் புரக்கும் நினது உயர்வு
நினையாது எம்பால் அன்பு இலனாயினை; நின்னைப்போலும் வேந்தர்
உலகத்தில் உளராயின் என்னைப் போலும் இரவலர் இவ்வுலகிற்
பிறக்கவேமாட்டார்கள். வறுமை வருத்தினும் என் மனையவள் தன்
கற்புக்கொள்கை தவறாத பொற்புடையவன். வறுமையால் அவள் ஒருகால்
உயிரிழந்திருப்பாள்; இறவாதிருப்பளாயின், என்னனை நினையாதிராள்;
நினைக்கும்போது, தன்னைப் பிரிந்துறையும் யான் இறந்தொழிந்தேனோ என
நினைந்து “என் உயிரும் ஒழிக” என் வருந்தியுரைத்துக் கொள்வன்,
அவளது இடுக்கண் தீர்த்தல் வேண்டி, நின்னைப் பகைத்துத் தோற்றவர்
செயலற்றொழிவது போல, யானும் செய்தவதறியாது தனிமைத் துயரை
முன்னிட்டுக் கொண்டு செல்கின்றேன்” என்ற சொல்லி நீங்கினார். அச்
சொற்கள் இப்பாட்டில் உள்ளன. பின்னர் அவன் அவர் வேண்டுவன
நல்கிவிடுத்தான்.
 மன்பதை காக்குநின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய வறனில் காட்சியொடு
நும்ம னோருமற் றினைய ராயின்
எம்ம னோரிவட் பிறவலர் மாதோ
5செயிர்தீர் கொள்கை யெம்வெங் காதலி
 உயிர்சிறி துடைய ளாயி னெம்வயின்
உள்ளா திருத்தலோ வரிதே யதனால்
அறனில் கூற்றந் திறனின்று துணியப்
பிறனா யினன்கொ லிறீஇயரென் னுயிரென
10நுவல்வுறு சிறுமையள் பலபுலந் துறையும்
 இடுக்கண் மனையோ டீரிய விந்நிலை
விடுத்தேன் வாழியர் குருசி லுதுக்காண்
அவல நெஞ்சமொடு செல்வனிற் சறுந்தோர்
அருங்கடி முனையரண் போலப்
15பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறுத்தே.