| திணையும் துறையு மவை. சேரமான் குடக்கோச்சேரலிகும் பொறை பரிசில்நீட்டித்தானைப்பெருங்குன்றூர்கிழார் பாடியது.
உரை:மன்பதைகாக்கும்நின் புரைமை நோக்காது - உயிர்ப் பன்மையைக் காக்கும் நினது உயர்ச்சியைப் பாராது; அன்பு கண்மாறிய அறனில்காட்சியொடு - காதல் கண்மாறிய அறமல்லாத பார்வையுடனே கூடி; நும்மனோரும் மற்று இனையராயின்நும்போல்வார் யாவரும் இதற்கொத்த அறிவையுடையராய் அருள்மாறுவாராயின்; எம்மனோர் இவண் பிறவலர் - எம்போல்வார் இவ்வுலகத்துப் பிறவாதொழியக்கடவர்; செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி - குற்றந்தீர்ந்த கற்பினையுடையளாய எம்மை விரும்பிய காதலி; உயிர் சிறிதுஉடையளாயின் இறந்துபடாது உயிர்வாழ்வுடையளாகக் கூடின; எம்வயின் உள்ளாதிருத்தலோ அரிது - எம்மிடத்து நினையாதிருத்தல் அரிது; அதனால்-; அறனில் கூற்றம் திறனின்று துணிய - அறனில்லாத கூற்றம் திறப்பாடின்றி உயிர்கொளத் துணிய; பிறனாயினன் கொல்- இறுந்துபட்டான் கொல்லோ; இறீஇயர் என் உயிர் என - என்னுயிர் கெடுவதாகவென்று; நுவல்வுறு சிறுமையள் - சொல்லுதலுற்ற நோயையுடையளாய்; பலபுலந் துறையும் - பல படவெறுத்துறையும்; மனையோள் இடுக்கண் தீரிய - மனைவியது துன்பம் தீர்க்கவேண்டி; குருசில் வாழியர் - இறைவ வாழ்வாயாக; உதுக்காண் - இதளைப் பாராய்; அவல நெஞ்சமொடு செல்வல் - இன்னாமையையுடைய நெஞ்சத்துடனேபோவேண்; நிற்கறுத்தோர் அருங்கடி முனையரண்போல-நின்னை வெகுண்டாது அணுகுதற்கரிய காவலையுடைய முனையிடத்து அரணைப்போல; பெருங்கையற்ற என் புலம்பு முந்துறுத்து - பெரிய செயலற்ற எனது வறுமையை முன்போகவிட்டு; எ - று.
குருசிலே, நும்மனோரும் இனையராயின், எம்மனோர் இவண்பிறவார்; எங் காதலி உயிர் சிறிதுடையளாயின் நினையாதிருத்தல் அரிது; அதனால் அம்மனையோள் இடுக்கண் தீர்க்கவேண்டி இப்பொழுதே விடுத்தேன்; நிற்கறுத்தோர் முனையரண்போலக் கையற்ற என் புலம்பு முந்துறுத்துச் செல்வேன், வழி யரெனக் கூட்டி வினைமுடிவு செய்க. உதுக்காண் என்றது அச் செலவை.
என் வறுமை என்னைவிட்டு நீங்கப் போதலையொழியப் புலம்பை முந்துறுத்துக் கொண்டு போகாநின்றேனென இரங்கிக் கூறியவதனால் வாழியர் குருசில் என்பது இகழ்ச்சிக் குறிப்பாயிற்று. உயிர்வெங் காதலி யென்று பாடமோதுவாருமுளர்.
விளக்கம்: பின்னர்த் தாம் செல்கின்ற செலவை உறுக்காண் எனச் சுட்டினார். நும்மனோர், எம்மனோர் என்புழி அன்னோரென்பது, இடைச்சொல் முதனிலையாகப் பிறந்த குறிப்புப் பெயர் என்று சேனாவரையர் முதலியோர் கூறுவர். இனையர், இதற்கொத்த அறிவுடையராய் அருள்மாறுவர். |