பக்கம் எண் :

236

     

நிலையைக் கண்ட மனையவள்; கணவன் எழுதலும் அஞ்சி - தன் கணவன்
உறக்கம் நீங்கி யெழுவனென் றஞ்சியும்; கலை பிணைவயின் தீர்தலும்
அஞ்சி - அக் கலையாகிய மான் பிணை மானை விட்டு நீங்கி
யோடிப்போமென்று அஞ்சியும்; யாவதும் - சிறிதும்; இல்வழங்காமையின் -
மனையிடத்தே நடமாடாமல் ஒருபுடை யொதுங்கி அமைந்தனளாதலால்;
கல்லென ஒலித்து - கல்லென ஆரவாரித்து; மானதள் பெய்த உணங்கு
தினை வல்சி - மான்தோலின் மேல் பரப்பி யுலர வைத்த தினையரிசியை;
கானக் கோழியொடு இதல் கவர்ந்துண்டென - காட்டுக் கோழியும் இதற்
பறவையும் கவர்ந்துண்டு அகப்பட்டனவாக; ஆர நெருப்பின் - சந்தனக்
கட்டையாலாகிய செருப்பில் கூட்டு; தடிவு ஆர்ந்திட்ட மழுவள்ளூரம் -
துண்டு துண்டாக அறுத்து நிறைந்த இறைச்சியை; ஆரல் நாற - ஆரல்
மீனின் நாற்றமும் உடன் கமழ; இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிதருந்தி
- கரிய பெரிய சுற்றத்தாரோடே ஒருங்கு கூடியிருந்து இனிதுண்டு; தங்கினை
சென்மோ - அவ்விடத்தே தங்கிச் செல்வாயாக; தங்காது - குறையாமல்;
வேந்து தரு விழுக்கூழ் - தனக்குப் பகைவேந்தர் திறையாகத் தந்தனவும்
தன் அவந்தன் சிறப்பாகத் தந்தனவு மாகயி பெருஞ் செல்வத்தை; என்றும்
பரிசிலர்க்கு அருகாது ஈயும் - எந்நாளும் தன்பால் வரும் பரிசிலர்க்குக்
குறையாமல் கொடுக்கும்; வண்மை - கொடையும்; உரைசால் நெடுந்தகை
ஒம்பும் ஊர் - புகழமைந்த நெடிய தகை மையினையுமுடைய தலைவன்
காக்கும் ஊரின்கண்; எ - று.


     ஊர் தங்கினை சென்மோ, பாண எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
வேட்டுவன் துயில் மடிந்தென, பிணைதழீஇக் கலை விளையாட, எழுதலு
மஞ்சி, தீர்தலுமஞ்சி, மனையோள் இல்வழங்காமையின், கோழியோடு இதல்
கவர்ந்துண்டென, வள்ளூரம் ஆரல் நாற, ஒக்கலொடு இனி தருந்திச்
சென்மோ என இயையும். பார்வை மடப்பிணை, பிற மான்களைப்
பிடிப்பதற்காகப் பயிற்சி செய்யப்பட்ட மடப்பிணை, தினையுணங்கலைப்
பரப்பிக் கண்ணிவைத்து, அவற்றை யுண்ணும் கோழியையும் இதலையும் புறா
முதலியவற்றையும் பிடித்தல் மரபு. உண்டென் என்பது உண்டு
பிடிபட்டனவாக எனக் காரியத்தின்மேல் நின்றது. பலர் தூங்கு நீழலென்றும்,
ஆரநாறவென்றும் பாடமோதி, பலர் உறங்கும் நீழலெனவும் சந்தனத்தின்
மணங்கமழவெனவும் முறையே பொருளுரைப்பாருமுனர்.

    விளக்கம்: முன்னைக் கொடியும் முசுண்டைக்கொடியும் முன்றிலில்
நிற்கும் பலாமரத்திற் படர்ந்து பந்தர் வேய்ந்ததுபோல் இனிய
நிழல்செய்தலின், பந்தர் வேண்டாப் பலாத் தூங்கு நீழல் என்றார். பலர்
தூங்கும் நீழல் என்ற பாடத்துக்குப் பலரும் கள்ளுண்டு கிடந்துறங்கும்
நீழலிடம் என்று உரைப்பினும் அமையும். கைம்மான், யானை. மேய்தலாகிய
தொழிலைக் கைவிட்டுப் பிணையோடு புணர்ச்சிவேட்கை கொண்டு
அதனொடு கூடி யுறைதலை விளக்குதற்குப் “பிறிதோர் தீர் தொழில்
தனிக்கலை திளைந்து விளையாட” என்றார். கலையும் பிணையும்