பக்கம் எண் :

246

     

இதன்கண் அவனது ஊர் நலமும் கொடை நலமும் குறிக்கப்பட்டுள்ளன. தலைவன்
பெயர் தெரியவில்லை.

 களிறுநீ றாடிய விடுநில மருங்கின்
வம்பப் பெரும்பெயல் வரைந்துசொழிந் திறந்தெனக்
குழிகொள் சின்னீர் குராஅ லுண்டலிற்
சேறுகிளைத் திட்ட கலுழ்கண் ணூறல்
 5.முறையி னுண்ணு நிறையா வாழ்க்கை
 முளவுமாத் தொலைச்சிய முழுச்சொலாடவர்
உடும்பிழு தறுத்த வொடுங்காழ்ப் படலைச்
சீறின் முன்றிற் கூறுசெய் திடுமார்.
 10.மறுகுடன் கமழு மதுகை மன்றத்
 தலந்தலை யிரத்தி யலங்குபடு நீழற்
கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
அருமிளை யிருக்கை யதுவே வென்வேல்
வேந்துதலை வரினுந் தாங்கும்
 15.தாங்கா வீகை நெடுந்தகை யூரே.

     திணையும் துறையு மவை. உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

     உரை: களிறு நீறாடிய விடுநில மருங்கில் - பன்றிகளால் புழுதியாக்
கப்பட்ட விடுநிலத்தின்கண்; வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து
இறந்தென - புதிதாக வந்த பெருமழை அவ்விடத்தை வரைந்துகொண்டு
பெய்து நீங்கிற்றாக; குழிகொள் சின்னீர் குரால் உண்டலின் - பள்ளங்களில்
தங்கிய சிறிதாகிய நீரைக் கன்றையுடைய பசுவானது ஆங்கே முளைத்திருந்த
புல்லை மேய்ந்து உண்டொழிதலால்; சேறு கிளைத்திட்ட கலுழ்கண்ணூறல் -
சேற்றை நீக்கித் தோண்ட வூறிய கலங்கலாகிய நீரை; முறையின் உண்ணும் -
முறை முறையாகச் சென்று முகந்துண்ணும்; நிறையா வாழ்க்கை - நிரம்பாத
வாழ்க்கையுடை; முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல்லாடவர் - முள்ளம்
பன்றியைக் கொன்ற முழுத்த சொல்லையுடைய வீரர்; அறுத்த உடும்பிழுது -
அறுத்தெடுத்த உடும்பின் தசையை; ஒடுங்காழ்ப் படலைச் சீறின் முன்றில் -
ஒடு மரத்தின் வலிய கழிகளாற் செய்யப்பட்ட படல் சார்த்தப்பட்ட சிறிய
மனை முற்றத்தில்; கூறு செய்திடுமார் - பகுத்தளித்தற் பொருட்டு; கொள்ளி
வைத்த கொழுநிண நாற்றம் - நெருப்பில் வேகவைத்த கொழுவிய நிணத்தின்
மணம்; மறுகுடன் கமழும் - தெருவெல்லாம் மணக்கும்; மதுகை மன்றத்து
அலந்தலை இரத்தி அலங்கு படு நீழல் - வலிய மன்றத்தில் நிற்கும் உலர்ந்த
தலையையுடைய