பக்கம் எண் :

249

     
 5. பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்
 கவிர்ப்பூ நெற்றிச் சேவலிற் றணியும்
அருமிளை யிருக்கை யதுவே மனைவியும்
வேட்டைச் சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தா ளுடும்பின்
 10.விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை
 யாணர் நல்லவை பாணரொ டொராங்கு
வருவிருந் தயரும் விருப்பினள் கிழவனும்
அருஞ்சமந் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்
தண்ணல் யானை யணிந்த
 15.பொன்சே யோரைடப் பெரும்பரி சிலனே.

     திணை: வாகை. துறை: மூதின்முல்லை. தங்காற் பொற்கொல்லனார்
பாடியது
.

     உரை: ஊர் முதுவேலி பார்நடை வெருகின் இருட்பகை வெரீஇய நாகு
இளம் பேடை - ஊரிலுள்ள பழையதாகிய வேலியடியில் தங்கும் மெத்தென்ற
நடையையுடைய காட்டுப் பூனையாகிய இருளில் வந்து வருத்தும் பகைக்கு
அஞ்சிய மிக்க இளமை பொருந்தி பெட்டைக்கோழி; உயிர் நடுக்குற்று புலா
விட்டரற்ற-உயிர்ப்பும் நடுக்கமும் கொண்டு தொண்டைத் தசையைத் திறத்து
கூவி; சிறையும் செற்றையும்   புடையுநள்  எழுந்த -  பக்கங்களையும்
குப்பைகளையும் புடைத்து நீக்குவாளாய் எழுந்திருந்த; பருத்திப் பெண்டின்
சிறு தீ விளக்கத்து - பருத்தி நூற்கும் பெண்டினுடை சிறிய விளக்கொளியில்;
கவிர்ப்பூ நெற்றிச்   சேவலின்  தணியும் -  முருக்கம்பூவை  யொத்த
கொண்டைமையுடைய  சேவற்  கோழியைக்  கண்டு  அச்சம்  தணியும்;
அருமிளை   இருக்கையது  -   சிறுவர்கள்;   செண்புலம்   படராது -
நெடுந்தொலைவு செல்லாமல்; படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின் -
மடுக்கரையில் பிடித்துக்கொண்டுவந்த குறுகிய காலையுடைய உடும்பினது;
விழுக்கு நிணம் பெய்த தயிர்க்கண் விதவை - விழுக்காகிய தசையைப்
பெய்து சமைக்கப் பட்ட தயிரோடு கூடிய கூழையும்; யாணர் நல்லவை -
புதியவாக   வந்த   வேறு நல்ல உணவுப்பொருளையும், பாணரொடு
வருவிருந்து ஓராங்கு அயரும் விருப்பினள் - பாணருக்கும் அவரொடு
வந்த ஏனை விருந்தினர்க்கும் ஒரு சேரக் கொடுத்து உண்பிக்கும் அவரொடு
விருப்பமுடையளாயுள்ளாள்; கிழவனும் - அவள் கணவனும், அருஞ்சமம்
ததையத் தாக்கி - கடத்தற்கரிய போர் கெடும்படியாகத் தாக்கி; அணிந்த
பெரும்போரில் தலைமையையுடைய