| | பிறர்வேல் போலா தாகி யிவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே இரும்புற நீறு மாடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினுங் கிடக்கும் | 5. | மங்கல மகளிரொடு மாலை சூட்டி | | இன்குர லிரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினுந் தெருவினுந் திரிந்து மண்முழு தழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங் கிருங்கடற் றானை வேந்தர் | 10. | பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே. |
திணையும் துறையு மவை. விரியூர் நக்கனார் பாடியது.
உரை:பிறர்வேல் போலா தாகி - ஏந்தும் வேல் போல வன்றி;இவ்வூர் மறவன் வேல் - இந்த ஊரையுடைய மறவனாகிய தலைவனது வேல்; பெருந்தகை யுடைத்து - பெரிய தகமையினையுடையதாகும்; இரும்புறம் நீறும் ஆடி - பெரிய இலைப்பக்கம் புழுதி படிந்து; குரம்பைக் கூரைக் கலந்து இடைக்கிடக்கினும் கிடக்கும் - குடிலின் கூரையில் செருகப்பட்டு அதனோ டொன்றாய்க் கலந்து கிடக்கினும் கிடக்கும்; மாலை சூட்டி - மாலைணியப் பெற்று; மங்கல மகளிரின் இன்குரல் இரும்பை யாழொடு ததும்ப - மங்கல மகளிரின் இனிய குரலானது பெரிய பையிடத்தே வைக்கப்படும் யாழிசையோடு கலந்திசைக்க; தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து- தெளிந்த நீருண்டாகிய மடுக்களிலும் தெருக்களிலும் ஊர்வலம் சென்று; மண் முழு தழுங்கச் செல்லினும் செல்லும் - பகைவர் நிலத்திலுள்ளார் அனைவரும் வருந்தச் சென்றாலும் செல்லும்; ஆங்கு - அவ்விடத்து; இருங்கடல் தானை வேந்தர் பெருங்களிற்ற முகத்தினும் செலவானாது - பெரிய கடல்போன்ற தானையையுடைய வேந்தர் மார்பினும் பெரிய களிற்றி யானைகளின் முகத்தினும் சென்று பாய்தலில் தப்பாதாகும்; எ - று.
வேல் பெருந்தகையுடைத்து; ஏன்னை, கிடக்கும், செல்லும், செலவானாதாகலின் என இயைத்து வினைமுடிவு செய்க. கூரையின் வேறாகாமல் நீறு படிந்து புழுதிகலந்துகாணப்படுதலின், கலந்திடைக் கிடப்பினும் கிடக்கும் என்றார். துருவேறியதனை நீறாடிய தென்றார். மகளிர், பாட, யாழ் இசைப்ப, படுவில் நீராட்டி மாைாசூட்டித் தெருவில் ஊர்வலம் செல்வதுண்மையின் செல்லும் என்றார். கருவி கருத்தாவாயிற்று. முகத்தினும் என்ற எச்சவும்மை வேந்தர் மார்பைத் தழுவி நின்றது.
விளக்கம்: தென்னார்க்காடு மாவட்டத்தில் கள்ளக்குறிச்சிப் பகுதியில் விரியூ ரென்னுமோரூர் உளது; ஆயினும் அதன் தொன்மை |