பக்கம் எண் :

262

     

யறிதற்குரிய சான்றொன்றும் கிடைத்திலது. வடபெண்ணைக் கரையிலும்
விரியுரொன்றைப் பன்னிரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று,
“ஐயங்கொண்ட சோழ மண்டலத்துப் பாக்கை நாட்டு விரியூர்ப் பெண்ணாற்று
வடகரையில் ஸ்ரீசங்கமீச்சுரமுடை யார்” (Nell Ins No. 108) எனக் கூறுகிறது.
“மாணார்ச் சுட்டிய வாண் மங்கலத்” (தொல். புறத். 30) துக்கு இளம்பூரணர்
இதனைக் காட்டுவர். “வெண்றவாளின் மண்ணல்” (தொல். புறத். 13)
என்பதனுரையில், “ஒன்றென முடித்தலால் இருவர் வேற்கும் சிறுபாண்மை
மண்ணுதல்  கொள்க”  என்று  கூறி,  இதனை   யெடுத்துக்காட்டுவர்
நச்சினார்க்கினியர். “மங்கல மகளிரொடு மாலை சூட்டி” யென்றதற்கு, மறக்குடி
மகளிர்க்கு மண வினை நிகழுமிடத்து வாள், வேல் முதலியவற்றை நீராட்டி
மாலை சூட்டி மணம் புரிவதாகிய செயலை எடுத்துக் காட்டுவதும் உண்டு.

333. மூதின்முல்லை

     இப் பாட்டைப் பாடினோரும் பாடப்பட்டோரும் இன்னா ரென்றறியக்
கூடவில்லை. குறிஞ்சி நிலத்தின் வழியாகச் செறற்குச் சமைந்த புலவர்களை
வேறொரு புலவன் கண்டு அந்நிலத்து வாழும் வேளாண் பெருமகன்
ஒருவனது மனை நலத்தையும் அவனுடைய பொருள் மாண்பையும் இதன்கண்
எடுத்தோதுவானாய், அந்நிலத்து ஊரவர் தம்பால் வருவோர் குறிப்பறிந்து
உணவு நல்கும் ஒட்பமுடையவரல்லர்; ஆயினும் நீவிர் அவ்விடம் விட்டு
நீங்குதல் கூடாது; அங்கே தங்குவீராயின், மனையுறையும் மகள் வந்து நீவிர்
உண்ணவும் கொள்ளவும் தக்க வரகும் தினையும் இல்லையாயினும்,
இல்லென்னாது தினைக்கதிரிடத்தே விதைக்கென விடப்பட்ட தினையைக்
கொணர்ந்தேனும் குற்றி உணவாக்கித் தருவள்; அச் செயலில் தவறாள்.
அவள் கணவனான வேளாண் பெருமகன் தன்பால் வேந்தனே வந்தாலும்
உண்பது அதுவேயாகும். அவன் போருடற்றிப் பெற்ற பெருவளங்களைப்
பாணர் முதலிய பரிசிலர்க்கு உதவி விடுவான் என்று கூறுகின்றான்.

 நீருட் பட்ட மாரிப் பேருறை
மொக்கு ளன்ன பொகுட்டுவிழிக் கண்ண
கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
உள்ளூர்க் குறும்புதற் றுள்ளுவன வுகளும்
5தொள்ளை மன்றத் தாங்கட் படரின்
 உண்கென வுணரா வுயவிற் றாயினும்
தங்கினர் சென்மோ புலவிர் நன்றும்
சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
வரகுந் தினையு முள்ளவை யெல்லாம்
10இரவன் மாக்க ளுணக்கொளத் தீர்ந்தெனக்
 குறித்துமா றெதிர்ப்பை பெறாஅ மையிற்
குரலுணங்கு விதைத்தினை யுரல்வாய்ப் பெய்து