| சிறிது புறப்பட்டன் றேவில டன்னூர் வேட்டக் குடிதொறுங் கூட்டு........ | 15. | ....................உடூம்புசெய் | | பாணி நெடுந்தேர் வல்லரோ டூரா வம்பணி யானை வேந்துதலை வரினும் உண்பது மன்னு மதுவே பரிசின் மன்னுங் குரிசில்கொண்டதுவே. |
திணையும் துறையு மவை................
உரை:நீருட் பட்ட மாரிப் பேருறை மொக்குள் அன்ன நீர்க்குள் வீழ்ந்த மழையினுடைய பெரிய தாரையாலுண்டாகிய குமிழிபோல; பொகுட்டுவிழிக் கண்ண - கொட்டை போன்ற விழி பொருந்திய கண்ணையும்; கரும்பிடர்த் தலைய - கரிய பிடரி பொருந்திய தலையையும்; பெருஞ்செவிக் குறுமுயல் - பெரிய செவியையு முடைய குறுமுயல்; உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன் உகளும் - ஊருக்குள்ளேயிருக்கும் குறிய புதலிடத்தே துள்ளி விளையாடும்; தொள்ளை மறைத்து ஆங்கண் படரின் - வளைகள் பொருந்திய மன்றத்துக்குச் சென்றால்; உண்கென உணரா உயவிற்றாயினும் - உண்மின் எனக் குறிப்புணர்ந்துரைப் பதல்லாத வருத்தமுடையதாயினும்; நன்றும் தங்கினிர் சென்மோ - பெரிதும் தங்கிச் செல்வீர்களாக; புலவீர் - அறிஞரகளே; சென்றதற் கொண்டு - சென்றதனால்; மனையோள் விரும்பி - மனையவள் விருப்பமுற்று; வரகும் தினையும் உள்ளவை யெல்லாம் - வரகும் தினையுமாகத் தன் மனையில் உள்ளவற்றை யெல்லாம்; இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென - இரவலர் உண்டதனாலுங் கொண்டதனாலும் தொலைந்தனவாக; குறித்துமாறு எதிர்ப்பை பெறாமையின் - குறி யெதிர்ப்பைத் தானும் பெறமுடியாமையால்; குரல் உணங்கு விதைத்தினை - கதிரிடத்தே முற்றி யுலரவிட்ட விதைத்தினையை; உரல்வாய்ப் உரல்வாய்ப் பெய்து - உரலிடத்தே பெய்து குற்றி யுண்பிப்பாளே யல்லது; சிறிது புறப்பட்டன்றோ விலள் - சிறிதும் இன்மை கூறி நீவிர் வறிதேகுமாறு விடவாளல்லள்; தன்னூர் வேட்டக்குடி தொறுங் கூட்டும் - தன்னூரிலுள்ள வேட்டுவர் மனைதோறும் கூட்டப்படும்; ...உடும்பு செய் பாணி நெடுந்தேர் வல்லரோடு - உடும்பின் தோலாற் செய்யப்பட்ட கைச்சரடு அணிந்த நெடிய தேரைச் செலுத்தவல்ல வீரருடனே; ஊரா - ஊர்ந்து; வம்பணி யானை வேந்து தலைவரினும் - கச்சணிந்த யானையையுடைய வேந்தர் தன்பால் வந்தாலும்; உண்பதும் அதுவே - உண்பிப்பது அதுவேயாம்; பரிசில் - அவன் தன்பால் வரம் பரிசிலர்க்கு |