பக்கம் எண் :

264

     

நல்கும் பரிசில்; குரிசில் கொண்டது - குரிசிலாகிய அவள் பகைவரை
வென்று பெற்ற பொருளேயாம்; எ - று.


     புலவீர் மன்றத்துத் தங்கினிர்   சென்மோ;ட  சென்றதற்கொண்டு
மனையோள்   விரும்பி, தீர்ந்தென, பெறாமையின், புறப்பட்டன்றோவிலள்;
வேந்து தலைவரினும் உண்பது அது; பரிசில் குரிசில் கொண்டது எனக்
கூட்டி வினைமுடிவு செய்க. மன்னும் உம்மும் அவை. பொகுட்டு விழி,
வன்மையாலும் வடிவாலும் பொகுட்டுப்போலும் விழி. குமிழி நிறமும்
ஒளியும்பற்றிய உவமமாதலின். “அடுக்கிய தோற்ற மன்று” மொக்குள்
அன்ன கண், பொகுட்டு விழிக் கண் என இயையும். எலியும் பிறவும்
தோண்டிய வளைகள் மிக்க மன்றம் என்றற்கு, “தொள்ளை மன்றம்”
என்றார். மன்றம் என்றது புறந்திண்ணை யெனக் கொள்க. வந்த
விருந்தினரது குறிப்பறிந்து ஓம்புவார் செயல் விருந்தினர்க்கு இன்பந்
தருவதாகலின், குறிப்பறியும் திறனில்லாத வேட்டக்குடி மன்றத்தை
“உண்கென  உணராவியல்பிற”  றென்றான்.உணராமை  காரியத்தின் 
மேனின்றது. உணரார் மனைக்கண் புலவர் விருந்தாதலை விழையாராதலின், 
அது  செய்யற்க  என்பது, “உணரா இயல்பிற்றாயினும் நன்றும் தங்கினிர்
சென்மோ புலவீர்” என்றான். இரத்தல் இழிவெனக் கருதாது மேற்
கோடலின், இரவலரை “இரவன் மாக்கன்” என்றார். குறித்து மாறு
எதிர்ப்பை, குறியெதிர்ப்பை; அஃதாவது கைம்மாற்றுக் கடன் முற்றிய
தினைக்கதிர்களை மனைக்கூரையிற் கட்டித் தொங்க விட்டுவைப்பது
இயல்பாதலால், அதனை யுரல் வாய்ப்பெய்து சமைத்து   மனையோள்
விருந்தோம்புவாளாயினள்.   புறப்படுதல் - வெளியே   செல்லவிடுதல்:
வெளிவருதலுமாம். விருந்தினர் உண்டொழியுங்காறும் வெளிப்பட்டிலள்
என்றுமாம். இரவலர் உண்டதனால் ஒரு பகுதியும் தரக் கொண்டதனால்
எஞ்சிய பகுதியும் ஆக எல்லாம் தொலைந்தமையின் “இரவலன் மாக்கள்
உணக்கொளத் தீர்ந்தென” என்றார். வித்தை யுண்டல் முறையன்றாயினும்
விருந்தோம்பற்கு அதுவும் அமையுமெனக் கொண்டனளென்பார், “விதைத்
தினை”என விதந்தோதினார்“குறித்துமா றெதிர்பை பெறாமையின்” என்றது,
அது முறையன்மை யுணரப்பட்டமை குறித்து நின்றது.“நனி பேதையே நயனில
்கூற்றம், விரகின்மையின் வித்தட்டுண்டனைஞ (புறம். 227) எனச் சான்றோர்
கூறுதல் காண்க. உடும்பு: ஆகு பெயர். பாணி,கை; ஆகு பெயராற் கைச்சரடு
குறித்து நின்றது.இதனை வம்பென்பதும வழக்கு;“வம்புகளை வறியாச் சுற்றம்”
(பதிற். 19)   என்பது   காண்க.   வுரவலர்  வரினும் இரவலர் வரினும்
விருந்தோம்பற்கண் வேறுபாடின்மை காட்டியவாறு. இப் பெற்றியோன்
இரவலர் புரவலனாவதற்குக் காரணம் கூறுவார், “பரிசில் மன்னும்
குரிசில் கொண்டதுவே” யென்றார்.

     விளக்கம்: புலவர்களை ஆற்றுப்படுத்துகின்றாராதலால், தொடக்கத்தே
ஊரினது இயல்பைக் கூறுகின்றார். ஊர்தொறும் மனைதோறும் பரிசிலர் வந்து
தங்குதற்கு மன்றங்களுண்மையின்,  ஊர்க்குச்  செல்லும்  புலவர்கள் அம்
மன்றங்களிற் றங்குவரென்பது கொண்டு, “தொள்ளை மன்றத் தாங்கண்
படரின்” என்றார். மன்றத்தின் பொலிவழிந்த தோற்றம் தன்னைக் காண்பார்
உள்ளத்தில் அருவருப்பை யுண்டுபண்ணி, உணவு வேட்கை யெழாவாறு
செய்யுமென்பது தோன்ற, “உண்கென வுணரா வுயவிற்றாயினும்” என்றார்.
தங்கிய வழி, மனைக்குரியவள் விரைந்தேற்று விருந்தோம்புவள் என்றற்கு
“விரும்பி” என்றார். புறப் பட்டன்றோ இலள்,