பக்கம் எண் :

281

     
 வேந்துகுறை யுறவுங் கொடாஅ னேந்துகோட்
டம்பூந் தொடலை யணித்தழை யல்குல்
செம்பொறிச் சிலம்பி னிளையோட டந்தை
எழுவிட் டமைத்த திண்ணிலைக் கதவின்
 5.அரைம ணி்ஞ்சி நாட்கொடி நுடங்கும்
 .................
புலிக்கணத் தன்ன கடுங்கட் சுற்றமொடு
மாற்ற மாறான மறலிய சினத்தன்
பூக்கோ ளெனவேஎய்க் வேளா மெல்லியற்
 10.விளங்கிழைப் பொலிந்த வேளா மெல்லியற்
 சுணங்கணி வனமுலை யவளொடு நாளை
மணம்புகு வைக லாகுத லொன்றோ
ஆரம ருழக்கிய மறங்கிளர் முன்பின்
நீளிலை யெஃக மறுத்த வுடம்பொடு
 15.வாரா வுலகம் புகுத லொன்றெனப்
 படைதொட்ட டனனே குருசி லாயிடைக்
களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
பெருங்கவி னிழப்பது கொல்லோ
மென்புல வைப்பினித் தண்பணை யூரே.

     திணையும் துறையு மவை. பரணர் பாடியது.

     உரை: வேந்து குறை யுறவும் கொடான் - வேந்தன் தானே வந்து
குறையுற்று நின்று மகட்கொடை வேண்டினானாகவும் கொடானாய்: அம்பூந்
தொடலை அணித்தழை - அழகிய பூக்கள் விரவித் தொடுத்தனையுடைய
அழகிய தழையினையும்:ஏந்து கோட்டு அல்கும்-உயர்ந்த பக்கத்தையுடைய
அல்குலினையும்:   செம்பொறிச்   சிலம்பின் -   செவ்விய   பொறிகள்
பொறிக்கப்பட்ட    சிலம்பினையுமுடைய:   இளையோள்   தந்தை -
இளைவட்குத்தந்தை யாயினான்: எழுவிட்டு அமைத்த திண்ணிலைக் கதவின் -
கணைய மரத்தைக் குறுக்கிட்டமைத்த திண்ணிய நிலையையுடைய கதவையும்:
அரை மண் இஞ்சி - அரைத்த மண்ணாலமைந்த மதிலையும்: நாட்கொடி
நுடங்கும் - நாடோறும் பெற்ற வெற்றிக்குறியாக எடுத்த கொடியசையும்:
...புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு - ...புலிக்கூட்டத்தை யொத்த
தறுகண்மையுடைய வீரர்சுற்றுத்துடனே: மாற்றம் மாறான் - தான் கொண்ட
வஞ்சின மாற்றம் தப்பானாய்: மறலிய சினத்தன் - போர்குறித்துண்டாகிய
சினமுடையனாய்: பூக்கோள் என ஏஎய் - வீரரனைவரும் போந்து
போர்ப்பூவைப் பெற்றுப்